வடிகால் பாலம் பணிகள் இழுபறி: வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை - பொள்ளாச்சி ரோட்டில், ரோடு மேம்பாட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் உள்ளதால், போக்குவரத்து ஸ்தம்பித்து விபத்து ஏற்படுகிறது.ஆனைமலை - பொள்ளாச்சி ரோடு, டாப்சிலிப், கோட்டூர் பகுதிகளுக்கான முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்நிலையில், ஆனைமலை, நெல்லுக்குத்திப்பாறை பகுதியில் மழைநீர் வடிகால் பாலத்தில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டதால், நீர் தேங்கி ரோட்டில்
 வடிகால் பாலம் பணிகள் இழுபறி: வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு

ஆனைமலை:ஆனைமலை - பொள்ளாச்சி ரோட்டில், ரோடு மேம்பாட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் உள்ளதால், போக்குவரத்து ஸ்தம்பித்து விபத்து ஏற்படுகிறது.ஆனைமலை - பொள்ளாச்சி ரோடு, டாப்சிலிப், கோட்டூர் பகுதிகளுக்கான முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்நிலையில், ஆனைமலை, நெல்லுக்குத்திப்பாறை பகுதியில் மழைநீர் வடிகால் பாலத்தில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டதால், நீர் தேங்கி ரோட்டில் வழிந்தோடியது.இதையடுத்து, பழைய வடிகால் பாலத்தை தோண்டிய நெடுஞ்சாலைத்துறையினர், குப்பை அடைக்காமல், மழைநீர் எளிதாக வழிந்தோடும் வகையில் புதியதாக, வடிகால் அமைத்து வருகின்றனர்.கடந்த, ஒரு மாதமாக இப்பணியில் இழுபறி நிலவுவதால், தினமும், போக்குவரத்து ஸ்தம்பித்து, விபத்துகள் ஏற்படுகின்றன. ஒரு கனரக வாகனம் சென்றால் கூட, பல மீட்டர்கள் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.பாலம் வேலை நடக்கும் பகுதியில், போதிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாமல் உள்ளதால், வேகமாக வரும் வாகன ஓட்டுனர்கள் பணி நடக்கும் இடத்தில் திடீரென பிரேக் பிடிப்பதால் விபத்து ஏற்படுகிறது.அங்கு, குண்டும் குழியுமாக உள்ள பகுதியில், மழைநீர் தேங்கி நின்று வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் பணியை விரைந்து முடித்தால் மட்டுமே, போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X