பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் தினகரன், மாநில இணை செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், துணை தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். இதில், பயோமெட்ரிக்நெட்ஒர்க் சர்வர் பிரச்னையை தீர்க்க
 ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது

.மாவட்டத் தலைவர் தினகரன், மாநில இணை செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஞானசேகரன், துணை தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். இதில், பயோமெட்ரிக்நெட்ஒர்க் சர்வர் பிரச்னையை தீர்க்க வேண்டும். 4 ஜி விற்பனை முனையம் வழங்குதல், பிரோக்சி முறையை நீக்க வேண்டும்,

பொருட்களை பொட்டலமாக வழங்குதல் ஆகிய 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர், தாலுகா தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.சிவகங்கை: சிவகங்கையில்ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கலெக்டர் அலுவலகம்எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கே.ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் எஸ்.எம்.முனியாண்டி, நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், தியாகராஜன், ரவிக்குமார், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துச்சாமி வரவேற்றார்.10 ஆண்டு, 20 ஆண்டு பணிபுரிந்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கப்பட வேண்டும்.

தேர்வு, சிறப்பு நிலை வழங்கிய பின்னரே ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 3500 விற்பனையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.500 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளில் 8 ஆயிரம் எடையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். விரல் ரேகை பதிவுக்கு பதிலாக கருவிழி பதிவினை கொண்டு ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X