பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஊட்டி,:'விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்,' என, விநாயகர் வேடமணிந்து வந்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.நீலகிரி சிவசேனா கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனு:நீலகிரியில், செப்., 10 ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடக்கிறது. கடந்தாண்டில், கொரோனா தொற்று காரணமாக, விநாயகர் சதுர்த்தி

ஊட்டி,:'விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்,' என, விநாயகர் வேடமணிந்து வந்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.நீலகிரி சிவசேனா கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் பிரபு ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனு:நீலகிரியில், செப்., 10 ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடக்கிறது. கடந்தாண்டில், கொரோனா தொற்று காரணமாக, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவில்லை.விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, விநாயகர் சிலைகள் செய்து வரும் கைவினை தொழிலாளர்கள், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X