பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை நெல் சாகுபடிக்கு தனி முத்திரை மதுரையில் கலெக்டர் புதிய முயற்சி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அந்த நெல் வகைகளுக்கு தனி முத்திரையும் விற்பனை வாய்ப்பும் வழங்கப்படும் என கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.மேலுாரில் இந்தாண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள சதுர்மடங்கன் உடுப்பங்குளம் நிலங்களை கலெக்டர் வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் நேரில் ஆய்வு செய்தனர்.
 இயற்கை நெல் சாகுபடிக்கு தனி முத்திரை   மதுரையில் கலெக்டர் புதிய முயற்சி

மதுரை : மதுரை மாவட்டத்தில் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அந்த நெல் வகைகளுக்கு தனி முத்திரையும் விற்பனை வாய்ப்பும் வழங்கப்படும் என கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.

மேலுாரில் இந்தாண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள சதுர்மடங்கன் உடுப்பங்குளம் நிலங்களை கலெக்டர் வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் கலெக்டர் கூறியதாவது: கடந்தாண்டு இந்த இரு கிராமங்களிலும் 13 ஏக்கரில் தான் குறுவை சாகுபடி நடந்தது. இந்தாண்டு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 207 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இயற்கை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி செலவு அதிகம் என்பதால் விளைபொருட்களுக்கும் அதற்கேற்ற விலை கிடைக்க வேண்டும். எனவே இயற்கை நெல் விவசாயிகளை ஒருங்கிணைத்து புதிய 'பிராண்டிங்' உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மதுரை மாவட்டத்திற்கென தனி முத்திரை உருவாக்கப்பட்டு 'இ-காமர்ஸ்', விற்பனை நிலையங்கள் கொண்டு வரப்படும். அதன் மூலம் இயற்கை விவசாயத்திற்கான சரியான விலை கிடைக்கும்.

அரசு கட்டடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளதால் அதற்கேற்ப மதுரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இனிமேல் விவசாயிகளுக்கு சிரமம் தராமல் கூட்டுறவுத் துறை மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X