பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடக பஸ்சில் பயணம்: 'கோவிட் நெகடிவ்' சான்று கட்டாயம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கூடலுார்:நீலகிரி- கர்நாடகா இடையே அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 'கோவிட் நெகடிவ்' சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக, ஏப்., 27 முதல், நீலகிரி-கர்நாடகா இடையே அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாநில அரசின் உத்தரவை தொடந்து, நேற்று முன்தினம் முதல், ஊட்டி- கர்நாடகா இடையேஇரு மாநில அரசு பஸ்கள் இயக்கம்

கூடலுார்:நீலகிரி- கர்நாடகா இடையே அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 'கோவிட் நெகடிவ்' சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக, ஏப்., 27 முதல், நீலகிரி-கர்நாடகா இடையே அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாநில அரசின் உத்தரவை தொடந்து, நேற்று முன்தினம் முதல், ஊட்டி- கர்நாடகா இடையேஇரு மாநில அரசு பஸ்கள் இயக்கம் துவங்கியது.இந்நிலையில்,'பஸ்களில் பயணிக்கும் தமிழக பயணிகளுக்கு 'கோவிட் நெகடிவ்' சான்று கட்டாயம்' என, கர்நாடக அரசு தெரிவித்தது. இதனால், நேற்று ஊட்டியிருந்து பெங்களுரு தமிழக அரசு பஸ்கள் இயக்கவில்லை.இந்நிலையில், மைசூரிலிருந்து நேற்று, ஊட்டி வந்த கர்நாடக அரசு பஸ், பயணிகளிடம், 'கோவிட் நெகடிவ்' சான்று இல்லாததால், அந்த பஸ், கக்கனல்லாவிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.தொடர்ந்து, நடந்த பேச்சு வார்த்தையில்,'இன்று (நேற்று) மட்டும், பஸ்களை அனுமதிப்பது என்றும்; நாளை (இன்று) முதல், பயணிகளிடம் கோவிட் சான்று இருந்தால் மட்டுமே, பஸ்கள் இயக்க அனுமதிப்பது,' என, முடிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X