பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைமதுரை கே.புதுார் அரசு ஐ.டி.ஐ., முதல்வர் அமலா ரெக்சலீன் கூறியுள்ளதாவது: ஐ.டி.ஐ., தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சியாளர்களை இணையதளம் வாயிலாக தேர்வு செய்ய முதற்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. தற்போது காலியான தொழிற்பிரிவுகளுக்கு ஆக., 24 முதல் செப்.,15 வரை நேரடி சேர்க்கை நடக்கிறது. பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ்,

ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை
மதுரை கே.புதுார் அரசு ஐ.டி.ஐ., முதல்வர் அமலா ரெக்சலீன் கூறியுள்ளதாவது: ஐ.டி.ஐ., தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சியாளர்களை இணையதளம் வாயிலாக தேர்வு செய்ய முதற்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. தற்போது காலியான தொழிற்பிரிவுகளுக்கு ஆக., 24 முதல் செப்.,15 வரை நேரடி சேர்க்கை நடக்கிறது. பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இரண்டு செட் சீருடைகள் வழங்கப்படும். விபரங்களுக்கு 88255 11818ல் தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.

சி.பி.ஐ., விசாரிக்க கோரி பா.ஜ., மனு
மதுரை கலெக்டர் மற்றும் சி.பி.ஐ., இணை இயக்குனருக்கு பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயசிங் அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த வசந்தி, அர்சத்திடம் ரூ.10 லட்சத்தை மிரட்டி பறித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவாகவுள்ளார். இன்ஸ்பெக்டர் மோசடி செயலால் போலீஸ் துறை மீது அதிருப்தி நிலவுகிறது. இந்த விசாரணையை தமிழக போலீசார் விசாரித்தால் உண்மை வெளியில் வரவாய்ப்பில்லை. எனவே மத்தியசிறப்பு புலனாய்வு பிரிவுக்கு இந்த விசாரணையை மாற்றி, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

45 ஆண்டுகளாக ஒதுக்கப்படாத வீட்டுமனை
வாடிப்பட்டி தாலுகா பூச்சம்பட்டி அம்சவள்ளி, தாயார் உள்ளிட்ட குடும்பத்தினருடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், 'என் தந்தை முனியாண்டி உள்ளிட்ட 15 பேருக்கு 1976 ல் வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை இதுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் அளந்து தரவில்லை. இதற்கிடையில் இடத்தை குறிப்பிட்ட ஒரு பிரிவினர் ஆக்கிரமித்து கொண்டனர். 45 ஆண்டுகளாக எல்லா அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கலெக்டர் அனீஷ்சேகர் தலையீட்டு வழங்கப்பட்ட பட்டாவிற்குரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X