பொது செய்தி

தமிழ்நாடு

செப்.1 முதல் டோல் கட்டணம் உயர்வு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மதுரை : செப்.1 முதல் தமிழகத்தில் 14 சுங்கச் சாவடிகளில் டோல் கட்டணம் 7 - 10 சதவீதம் உயர்வு என்ற தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைத்துறை தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகளை அமைத்துள்ளது. அதில் 26 சுங்கச் சாவடிகளுக்கு ஏப்., 1, மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கு செப்., 1ல்

மதுரை : செப்.1 முதல் தமிழகத்தில் 14 சுங்கச் சாவடிகளில் டோல் கட்டணம் 7 - 10 சதவீதம் உயர்வு என்ற தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைத்துறை தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகளை அமைத்துள்ளது. அதில் 26 சுங்கச் சாவடிகளுக்கு ஏப்., 1, மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கு செப்., 1ல் ஒவ்வொரு ஆண்டும் கட்டண திருத்தம் செய்கிறது.ஏற்கனவே அதிக கட்டணத்தால் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் கூடுதல் கட்டண அறிவிப்பு அதிர்ச்சி தருகிறது. நாட்டில் 29,666 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன.

தமிழகத்தில் மட்டும் அதிகபட்சம் 48 சாவடிகள் உள்ளன. 64.50 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. தினமும் ரூ. 135 கோடி வசூலாகிறது. சாவடி வழி செல்லும் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும்போது கட்டணம் குறைக்கும் விதியை ஒப்பந்ததாரர்கள் பின்பற்றுவதில்லை.ஒப்பந்ததாரர் சுங்கவரியில் 15 சதவீதம் சாலை பராமரிப்புக்கு முறையாக செலவிடவேண்டும்.தேசிய நெடுஞ்சாலை துறை உபயோகிப்பாளர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காத நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்துவது சரியல்ல. கொரோனாவால் வணிகத் துறையினர் நிதி நெருக்கடியில் உள்ளதால்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். கட்டணம், வாகனம், சாலை, சுங்கச் சாவடி செலவு, லாபம் குறித்து மக்கள் அறிந்திட மத்திய அரசு மற்றும்தேசிய நெடுஞ்சாலை துறைவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X