பொது செய்தி

தமிழ்நாடு

நீர் சிக்கன கருத்தரங்கம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையத்தில் துவங்கிய விவசாயிகளுக்கான நீர் சிக்கன கருத்தரங்கில் பங்கேற்ற கலெக்டர் அனீஷ்சேகர் '' நீராதாரங்களை பராமரிப்பதும் பாதுகாப்பதும் அவசியம்'' என்றார்.விழாவில் பயிற்சி நிலைய துணை இயக்குனர் பிரபா வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசியதாவது: மதுரையில்
நீர் சிக்கன கருத்தரங்கம்

மதுரை : மதுரை விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையத்தில் துவங்கிய விவசாயிகளுக்கான நீர் சிக்கன கருத்தரங்கில் பங்கேற்ற கலெக்டர் அனீஷ்சேகர் '' நீராதாரங்களை பராமரிப்பதும் பாதுகாப்பதும் அவசியம்'' என்றார்.விழாவில் பயிற்சி நிலைய துணை இயக்குனர் பிரபா வரவேற்றார்.

வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசியதாவது: மதுரையில் இரண்டாண்டுகளாக வறட்சி இல்லை என்பதற்காக இதற்கு முன்பிருந்த வறட்சி காலகட்டங்களை மறந்து விடக்கூடாது. நீராதாரங்களை சரியான முறையில் பாதுகாத்து பராமரித்தால் தான் விவசாயம் செய்ய முடியும். நீரை சிக்கனப்படுத்தும் தொழில்நுட்பம் இப்போதைய விவசாயிகளுக்கு அவசியம் தேவை. அதற்காக நான்கு நாட்கள் அளிக்கப்படும் பயிற்சியை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

சிறுதானிய பயிர் வகைகள் இயற்கை சாகுபடிக்கு ஒத்துப் போகும் என்பதால் அவற்றை சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்றார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, துணை இயக்குனர் சுப்புராஜ், உதவி இயக்குனர் செல்வி, விதை பரிசோதனை நிலைய உதவி இயக்குனர் சிங்காரலீனா கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் ஜோஸ்பின் நிர்மலா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X