பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் 'பிளக்ஸ்' பேனர் அகற்றினால் ஆபத்தில்லை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டியில் சேரிங்கிராஸ் பகுதியில், அரசு மற்றும் தனியார் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.நீலகிரியில், பசுமையை பாதுகாக்கும் நோக்கில், 22 வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன், ஒரு பகுதியாக, மலை பாதையில், 'பிளக்ஸ்' பேனர்களை படிப்படியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால், அரசியல் கட்சி, கல்வி நிறுவனங்கள்
 ஊட்டியில் 'பிளக்ஸ்' பேனர் அகற்றினால் ஆபத்தில்லை

ஊட்டி:ஊட்டியில் சேரிங்கிராஸ் பகுதியில், அரசு மற்றும் தனியார் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.நீலகிரியில், பசுமையை பாதுகாக்கும் நோக்கில், 22 வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன், ஒரு பகுதியாக, மலை பாதையில், 'பிளக்ஸ்' பேனர்களை படிப்படியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால், அரசியல் கட்சி, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களை விளம்பர பேனர்களை பெரும்பாலும் அகற்றினர். இந்நிலையில், மாவட்டத்தின் சிலபகுதிகளில், அரசு மற்றும் தனியார் சார்பிலும் வைக்கப்பட்ட பேனர்கள் காணப்படுகின்றன. ஊட்டி சேரிங்கிராஸ், பாரதியார் வணிக வளாகத்தின் மீதும் சில பேனர்கள் காணப்படுகின்றன. மழை; காற்றினால், இவைகள் விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, இவற்றை அகற்ற வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X