ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் பைபாஸ் ரோடு| Dinamalar

ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் பைபாஸ் ரோடு

Added : ஆக 25, 2021
Share
மதுரை : எதிர்காலத்தில் இப்படி ஒரு ரோடு இருந்த சுவடுகளே தெரியாத அளவிற்கு காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக ரோடுகளை ஆக்கிரமித்த கடைகள் குறித்து கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை 'யாராவது கண்டா வரச்சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க, பைபாஸ் ரோட்டை மீட்க சொல்லுங்க...' என மக்கள் பாடாத குறையாக படாத பாடுபட்டு
 ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் பைபாஸ் ரோடு

மதுரை : எதிர்காலத்தில் இப்படி ஒரு ரோடு இருந்த சுவடுகளே தெரியாத அளவிற்கு காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக ரோடுகளை ஆக்கிரமித்த கடைகள் குறித்து கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை 'யாராவது கண்டா வரச்சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க, பைபாஸ் ரோட்டை மீட்க சொல்லுங்க...' என மக்கள் பாடாத குறையாக படாத பாடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

பெயருக்கு சர்வீஸ் ரோடு என்று அமைத்து விட்டு வாகனங்களை பார்க்கிங் செய்ய, கடைகளை வைக்க யார் தான் அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தால் கூட சர்வீஸ் ரோட்டில் முட்டி, மோதி தான் செல்ல வேண்டும். 'இந்நிலை என்று தான் மாறுமோ எங்கள் பிரச்னை என்று தான் தீருமோ' என, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வரும் அதிகாரிகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் பகுதி மக்களின் நிலை படு மோசம் தான்.ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் மூன்று துறைகளையும் சேர்ந்த சிலர் போட்டி போட்டுக்கொண்டு ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளிடம் வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X