வரையறைகளை நிறைவேற்றாத 348 வங்கிசாரா நிதி நிறுவனங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வரையறைகளை நிறைவேற்றாத 348 வங்கிசாரா நிதி நிறுவனங்கள்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: 'வங்கிசாரா நிதி நிறுவனங்களாக செயல்பட தேவையான வரையறைகளை, 348 நிறுவனங்கள் நிறைவேற்றவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனங்கள் சட்டம் 2013-ல், 406வது பிரிவு மற்றும் திருத்தப்பட்ட நிதி விதிமுறைகள் 2014ன் கீழ், வங்கிசாரா நிதி நிறுவனங்களாக செயல்பட விரும்பும் நிறுவனங்கள், மத்திய அரசிடம்
Nidhi companies, investing money, non banking, finance entities

புதுடில்லி: 'வங்கிசாரா நிதி நிறுவனங்களாக செயல்பட தேவையான வரையறைகளை, 348 நிறுவனங்கள் நிறைவேற்றவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனங்கள் சட்டம் 2013-ல், 406வது பிரிவு மற்றும் திருத்தப்பட்ட நிதி விதிமுறைகள் 2014ன் கீழ், வங்கிசாரா நிதி நிறுவனங்களாக செயல்பட விரும்பும் நிறுவனங்கள், மத்திய அரசிடம் என்.டி.எச்., - -4 படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி செயல்பட அனுமதி கோரி வந்த 348 நிறுவனங்களின் விண்ணப்பங்கள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்டன.


latest tamil news


இதில், ஒரு நிறுவனம் கூட நிதி நிறுவனமான செயல்படுவதற்கான வரையறைகளை நிறைவேற்றவில்லை. பல நிறுவனங்கள் நிதி நிறுவனங்களாகச் செயல்பட்டாலும், அவை மத்திய அரசிடம் விண்ணப்பிக்கவில்லை; இது, நிறுவனங்கள் சட்டம் மற்றும் நிதி விதிமுறைகளுக்கு எதிரானது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையான வங்கிசாரா நிதி நிறுவனமான செயல்படுவதற்கான வரையறைகளை நிறைவேற்றி, மத்திய அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X