சத்தீஸ்கரில் முதல்வர் பதவிக்கு போட்டி; ராகுல் சமாதானம்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: சத்தீஸ்கர் முதல்வர் பதவிக்கு பூபேஷ் பாகேல், டி.எஸ்.சிங் தியோ இடையே கருத்துவேறுபாடு நிலவிய நிலையில், காங்., முன்னாள் தலைவர் ராகுல், இருவரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.சத்தீஸ்கரில், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்றதை அடுத்து, மூத்த தலைவர்கள் டி.எஸ்.சிங் தியோ, பூபேஷ் பாகேல் ஆகியோர் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டனர். முடிவில்,
Congress,Rahul,Chhattisgarh CM,Rahul Gandhi, Bhupesh Baghel, TS Singh Deo calle, காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: சத்தீஸ்கர் முதல்வர் பதவிக்கு பூபேஷ் பாகேல், டி.எஸ்.சிங் தியோ இடையே கருத்துவேறுபாடு நிலவிய நிலையில், காங்., முன்னாள் தலைவர் ராகுல், இருவரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சத்தீஸ்கரில், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்றதை அடுத்து, மூத்த தலைவர்கள் டி.எஸ்.சிங் தியோ, பூபேஷ் பாகேல் ஆகியோர் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டனர். முடிவில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருவர் என, முதல்வர் பதவிக்கான கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து பாகேல் முதல்வராகவும், சிங் தியோ சுகாதாரத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். ஆனால் இரண்டரை ஆண்டுகள் முடிந்தும், முதல்வர் பதவியை பாகேல் விட்டுத் தரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. இதையடுத்து, இருவருக்கும் ராகுல் அழைப்பு விடுத்திருந்தார்.


latest tamil news



டில்லியில் நேற்று இருவரும் ராகுலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது சத்தீஸ்கர் மாநில காங்., தலைவர் பி.எல்.புனியா, காங்., தேசிய பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து, சோனியாவையும் பாகேல் சந்தித்தார். இது குறித்து நிருபர்களிடம் பேசிய இருவரும், ''கட்சித் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்படுவோம்,'' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-ஆக-202112:59:39 IST Report Abuse
Ramesh Sargam ஒரு மாநில முதல்வர் பதவிக்கே இப்படி அடித்துக்கொள்ளும் இந்த காங்கிரஸ் கட்சி, நாளை 'ஒரு வேலை' மத்தியில் ஆட்சியில் அமர்ந்தால், அந்த பிரதமர் பதவிக்கு எப்படி அடித்துக் கொள்வார்கள். இதில் கூட்டணி வேறு... உறுப்பட்டாமாதிரிதான்...
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
25-ஆக-202112:36:11 IST Report Abuse
Narasimhan காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மட்டும் யாரும் போட்டி போடக்கூடாது. மற்ற மாநிலங்களில் போட்டி உண்டு. ஆனால் இத்தாலிய தலைவி சொல்வதை ஒப்புக்கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
25-ஆக-202111:57:29 IST Report Abuse
HSR இவன் சமாதானம் பண்ணிவைக்கராண்ணா அவங்க ரெண்டு பேருக்கும் பதினாலு 15 வயசு இருக்குமா? என்ன கொடுமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X