அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பாட புத்தகத்தில் வரலாறு திரிப்பு': சீமான்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: 'வெளிநாடுகளில் வெளியிடப்பட்டிருக்கும், தமிழ் குழந்தைகளுக்கான தமிழ் பாட புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டிருப்பது, கடும் கண்டனத்துக்குரியது' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை என்ற அமைப்பால், தமிழ்
NTK, Seeman, School Books, History, நாம் தமிழர் கட்சி, சீமான், பள்ளிப் புத்தகம், வரலாறு திரிப்பு

சென்னை: 'வெளிநாடுகளில் வெளியிடப்பட்டிருக்கும், தமிழ் குழந்தைகளுக்கான தமிழ் பாட புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டிருப்பது, கடும் கண்டனத்துக்குரியது' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை என்ற அமைப்பால், தமிழ் குழந்தைகளுக்காக, தமிழ்பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அப்புத்தகங்களில், தமிழர்களின் வரலாறு முழுமையாக திரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.


latest tamil news


ஈழத்தின் பூர்வகுடிகள் தமிழர்கள் இல்லை; தமிழ் மன்னர்கள் சிங்கள மக்களை துன்புறுத்தினர்; தமிழர்கள் போராடியதால் தான் கொல்லப்பட்டனர் என, கற்பனையில் பொய்களை, தமிழர் இன வரலாறாக மாற்ற முனையும் வன்மச் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.ஈழ தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில், அவர்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதுாறுப் பிரசாரத்தை தடுத்து முறிடியக்க வேண்டும். தமிழர்களின் மெய்யான வரலாற்றை நிலை நிறுத்த, உலகத் தமிழர்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pdhayalan - தமிழ்நாடு ,இந்தியா
27-ஆக-202112:41:34 IST Report Abuse
Pdhayalan சீமான் சொன்ன கருத்துக்கு, எதிர் மறை கருத்து சொல்கிறவர். தமிழனா இருக்கு மாட்டார்கள..
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஆக-202105:04:06 IST Report Abuse
meenakshisundaram என்னமோ இப்ப'எல்லோரும் நாட்டு வரலாற்றை கரைச்சு குடிச்ச மாதிரி இந்த மக்களுக்கு முக ,ராமசாமி நாயக்கன் .அண்ணாதுரை -இவனுங்களை தான் தெரியுமே தவிர அதை தவிர 'டாஸ்மாக் 'வேறே ஒன்னும் நஹி
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-ஆக-202115:45:52 IST Report Abuse
Vena Suna உங்களுக்கும் ஈழத்துக்கும் சம்பந்தமே இல்லையே.ரொம்ப படம் காட்டறீங்களே சீமான் அங்கிள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X