பொது செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர் பணி நியமன அரசாணை; திரும்ப பெற 5,000 போஸ்டர் ஒட்டி பிரசாரம்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
ஆம்பூர்: அர்ச்சகர் பணி நியமனம் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி, விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் போஸ்டர் தயாரிக்கப்பட்டது. அதன் வெளியீட்டு விழா திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் நேற்று நடந்தது.கட்சியின் நிறுவனர் ஜெய்சங்கர் போஸ்டரை வெளியிட்ட பின் பேசியதாவது: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அர்ச்சகர்,
அர்ச்சகர், பணி நியமனம், அரசாணை, போஸ்டர், பிரசாரம்

ஆம்பூர்: அர்ச்சகர் பணி நியமனம் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி, விஜய பாரத மக்கள் கட்சி சார்பில் போஸ்டர் தயாரிக்கப்பட்டது. அதன் வெளியீட்டு விழா திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் நேற்று நடந்தது.

கட்சியின் நிறுவனர் ஜெய்சங்கர் போஸ்டரை வெளியிட்ட பின் பேசியதாவது: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அர்ச்சகர், ஓதுவார்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு, 2021 ஜூலை, 6ல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆகம விதிகளின்படி செயல்படும் கோவில்களில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அர்ச்சகர் பணிக்கு ஓராண்டு சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளில் கைதேர்ந்த அனுபவம் மிக்க பலரும், 10ம் வகுப்பில் தேர்ச்சியோ, ஓராண்டு சான்றிதழ் படிப்போ முடிக்காதவர்கள்.

அவர்கள் சிறு வயதிலேயே குருகுலக் கல்வி மூலம் தீட்சிதை பெற்று, மூன்று ஆண்டுகள் ஆகம விதிகளை பின்பற்றி வேத மந்திரங்கள், வழிபாட்டு முறைகளை கற்றவர்கள். ஹோமம், கும்பாபிஷேகம், பூஜை வழிபாடுகளில் ஐந்தாண்டு அனுபவம் பெற்றவர்கள். பாரம்பரிய மரபு, மதச்சடங்குகளில் முறையான பயிற்சி மேற்கொண்டவர்களை மட்டுமே அர்ச்சகர், பட்டாச்சாரியார், ஓதுவார் ஆக நியமிக்க முடியும். ஹிந்து சமய அறநிலையத்துறை கீழ், 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இதில், 3000 கோவில்களில் தான் பரம்பரை அர்ச்சகர்களாக பிராமணர்கள் உள்ளனர்.


latest tamil news


மீதமுள்ள கோவில்களில் பல்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள் பரம்பரை அர்ச்சகர்களாக உள்ளனர். இந்த கட்டமைப்பை எதற்காக, தி.மு.க., அரசு மாற்ற நினைக்கிறது. கோவிலில் பூஜை செய்வது என்பது டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி வரும் பதவி போன்றதல்ல. ஓராண்டு பயிற்சி முடித்தவரை பாரம்பரிய கோவில் கருவறைக்குள் அனுமதிப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. ஹிந்து மதத்தை அழிப்பதற்கு சமம்.

அர்ச்சகர் பயிற்சி முடித்த, 240 பேரின் செயல்பாடுகள் சந்தேகமாக உள்ளன. எனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு, ஆன்மிகக் கலாசார தர்மத்தை பாதுகாக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 5,000 போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
26-ஆக-202108:31:17 IST Report Abuse
PKN அதை ஆதரிப்பவர்கள் 98% இந்துக்கள் இந்த விசயத்தை அவரிடம் எடுத்து கூறுங்கள்.
Rate this:
Cancel
26-ஆக-202106:04:06 IST Report Abuse
இவன் டீமுக ஹிந்து விரோத கட்சி இல்ல, நம்புங்க
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
25-ஆக-202119:20:05 IST Report Abuse
T.sthivinayagam உலகில் பிறந்த யாராயிருந்தாலும் இறைபனியாற்ற விரும்பினால் இறைவன் தடுப்பதில்லை. அதைப்போல அனைவரும் தனது தாய் மொழியில் கடவுளை வணங்குவது தான் இறைவன் விருப்பம். சுயநலத்திற்காக தடுப்பதை இறைவனும் ஐனநாயக நாடும் ஏற்றக்கொள்ளாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X