சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பலி; காப்பாற்ற முயன்றவரும் உயிரிழப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை: சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் முதியவர் பலியானார், காப்பாற்ற முயன்ற வாலிபரும் உயிரிழந்தார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டை ரோடு சர்ச் அருகே லாரி மோதி சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. எதிர்பாராதவிதமாக இன்று (ஆக.,25) காலை அவ்வழியே சென்ற தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல், 65, என்பவர்

மயிலாடுதுறை: சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் முதியவர் பலியானார், காப்பாற்ற முயன்ற வாலிபரும் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டை ரோடு சர்ச் அருகே லாரி மோதி சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. எதிர்பாராதவிதமாக இன்று (ஆக.,25) காலை அவ்வழியே சென்ற தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல், 65, என்பவர் அந்த கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அதனைக் கண்ட குளங்கரை பகுதியை சேர்ந்த அரவிந்தன், 25, என்பவர் முதியவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X