அரசியல் செய்தி

தமிழ்நாடு

பென்னிகுவிக் இல்லத்தை இடித்து கருணாநிதி நூலகமா?: ஸ்டாலின் பதில்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: ‛‛மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை,'' என அ.தி.மு.க. எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய (ஆக.,25) கூட்டத்தொடரில், மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டுவதாக முன்னாள்
Tamilnadu, Assembly, Stalin, CM, DMK, Karunanidhi, Library, Madurai, தமிழகம், சட்டசபை, முதல்வர்,ஸ்டாலின், கருணாநிதி, நூலகம்

சென்னை: ‛‛மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை,'' என அ.தி.மு.க. எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய (ஆக.,25) கூட்டத்தொடரில், மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டுவதாக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் ராஜூ குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‛‛நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்ததாக கூறுவது தவறான கருத்து,'' எனக் கூறினார்.


latest tamil news


தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். இந்த அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுத்து மாற்ற தயாராக இருக்கிறது. இரண்டு முறை அமைச்சராக இருந்து, தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள செல்லூர் ராஜூ போன்ற மூத்த உறுப்பினர் எந்த ஆதாரமும் இல்லாமல் தவறான தகவலை அவையில் கூறக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
25-ஆக-202121:44:34 IST Report Abuse
BASKAR TETCHANA பென்னிகுயிக் யார் என்றே தெரியாது அவர் வரலாறு என்ன என்பதும் தெரியாது இவர் அமெரிக்காவில் எண்ணத்தை கிழித்தார் என்றே தெரியாது. இவர் பென்னிகுயிகந்த இடத்தில் வாழ்ந்தார் என்பத தவறு என்கிறார். இவனெல்லாம் ஒரு நிதி அமைச்சர்.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
25-ஆக-202119:51:48 IST Report Abuse
HSR தன் சொத்தை விற்று அணை கட்டிக் கொடுத்த பென்னிகுயிக் வீட்டையும் இவனுங்க ஆட்டையை போடுவது பெரிய விஷயம் ஒண்ணு நீங்க பேசிக்கிட்டு இருக்கறத பார்த்தா எனக்கு ஒரே சிரிப்பா வருது. அஞ்சு வருஷம் பொருத்து பாருங்கடா எத்தனை பேருடைய வீட்டை ஆட்டையை போட்டுறுக்க போறாங்கன்னூ..
Rate this:
Cancel
25-ஆக-202119:28:32 IST Report Abuse
யோகேஷ் பென்னி குவிக் வாழ்ந்த வீடு அல்ல...அவரை போற்றும் விதமாக தென்மாவட்ட மக்களின் துயர் துடைக்க வாழ்ந்து அணை கட்டினார்...அவரை நினைவு கூறும் விதமாக உள்ளது அந்த வீடு...அவர் அரசியல்வாதி அல்ல...மாமனிதர்...தியாகி.அவரின் பெயரை களங்கப்படுத்தும் விதமாக செயலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத தென் மாவட்ட மக்களை அன்னாரின் ஆன்மா மன்னிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X