'3000 ஏக்கர் கோவில் சொத்துக்கள் இந்தாண்டுக்குள் மீட்கப்படும்'

Added : ஆக 25, 2021
Share
Advertisement
தர்மபுரி : ''இந்தாண்டுக்குள், 3000 ஏக்கர் கோவில் சொத்துக்கள் மீட்கப்படும்,'' என, திருதொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவில் சொத்துக்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புக்கள் அகற்றுவது தொடர்பாக, கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆய்வு கூட்டத்தில், கலெக்டர்

தர்மபுரி : ''இந்தாண்டுக்குள், 3000 ஏக்கர் கோவில் சொத்துக்கள் மீட்கப்படும்,'' என, திருதொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவில் சொத்துக்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புக்கள் அகற்றுவது தொடர்பாக, கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆய்வு கூட்டத்தில், கலெக்டர் திவ்யதர்ஷினி பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தினால், தர்மபுரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பிலுள்ள சுமார், 3,000 ஏக்கர் கோவில் நிலங்கள் இந்த ஆண்டுக்குள் மீட்கப்பட்டு விடும். ஆய்வு கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்பிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். தமிழகத்தில், அதிக சொத்துக்களை கொண்டுள்ளது அறநிலையத்துறையாகும். இதன் வருவாய் நேரடியாக இந்த துறைக்கே கிடைக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X