தலிபான்களின் ஒத்துழைப்பை பொறுத்து ஆக.,31க்குள் அமெரிக்க படைகள் வெளியேற்றம்: ஜோ பைடன்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன்: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது தலிபான்களின் ஒத்துழைப்பு மற்றும் விமான நிலையங்களை பயன்படுத்த அனுமதிப்பதை பொறுத்தே அமையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறத் துவங்கியதை அடுத்து, அங்கு ஒவ்வொரு பகுதியாக தன்வசப்படுத்திய தலிபான்கள், ஆப்கன் ஆட்சி அதிகாரத்தையும்
Evacuation Mission, Depends, Taliban Cooperation, Afghan, Joe Biden, Taliban, அமெரிக்க படைகள், வெளியேற்றம், தலிபான்கள், ஒத்துழைப்பு, ஜோ பைடன்

வாஷிங்டன்: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது தலிபான்களின் ஒத்துழைப்பு மற்றும் விமான நிலையங்களை பயன்படுத்த அனுமதிப்பதை பொறுத்தே அமையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறத் துவங்கியதை அடுத்து, அங்கு ஒவ்வொரு பகுதியாக தன்வசப்படுத்திய தலிபான்கள், ஆப்கன் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர். தற்போது, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள விமான நிலையத்தில் மட்டுமே அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்தவாறு அமெரிக்கர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தங்கள் படைகள் முழுவதையும் திரும்பப்பெற்றுவிட வேண்டும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றும் பணியில் இறுதிகட்டத்தில் உள்ளோம். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுவது என்பது தலிபான்களின் ஒத்துழைப்பு மற்றும் விமான நிலையங்களை பயன்படுத்த அனுமதிப்பது, நமது நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை பொறுத்தே அமையும். தலிபான்களுடனான நமது அனுகுமுறையை ஜி7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஐ.நா.,சபை ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளன. தலிபான்களின் நடவடிக்கைகளை பொறுத்து அவர்களை மதிப்பிடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-ஆக-202122:45:39 IST Report Abuse
Ramesh Sargam ஜோ பைடன் அவர்களின் மிகப்பெரிய தவறு, அமெரிக்க படைகளை வாபஸ் பெரும் எண்ணம். இப்பொழுது அதன் விளைவுகள் மிக மோசமாக உள்ளது.
Rate this:
Cancel
25-ஆக-202120:13:17 IST Report Abuse
Vittal anand rao. தலிபான்கள் உத்தசரசவுக்கு வாய்தா கேட்குமளவுக்கு அமெரிக்கா அசிங்கப்பட்டு போனது. டிரம்ப் இருண்டபதிருந்தால் முழு அமெரிக்க படைகளையும் இறக்கி இவர்களை ஒழி த்து கட்டிகிருப்பர
Rate this:
Cancel
25-ஆக-202120:13:17 IST Report Abuse
Vittal anand rao. Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X