அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நிர்வாக குளறுபடிகளை சீர் செய்வோம்'

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை : ''கடந்த காலங்களில் துறையில் சில நிர்வாக குளறுபடிகள் இருந்தன. அவற்றை சீர் செய்து முறையான நிர்வாகத்தை எதிர்காலத்தில் செயல்படுத்துவோம்'' என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் அவரது பதிலுரை:இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ஊரக வளர்ச்சி துறை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஊரக

சென்னை : ''கடந்த காலங்களில் துறையில் சில நிர்வாக குளறுபடிகள் இருந்தன. அவற்றை சீர் செய்து முறையான நிர்வாகத்தை எதிர்காலத்தில் செயல்படுத்துவோம்'' என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் அவரது பதிலுரை:
இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ஊரக வளர்ச்சி துறை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஊரக வளர்ச்சி துறை சார்பில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்து 170 மனுக்கள் பெறப்பட்டன. குதில் 18 ஆயிரத்து 927 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 1042 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன.

தகுதியான 24 ஆயிரத்து 125 மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டை எதிர்நோக்கியுள்ளன. தகுதி குறைவான 28 ஆயிரத்து 118 மனுக்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதை பாராட்டி முதல்வர் சான்றிதழ் வழங்கி உள்ளார்.துறைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக நிதி ஒதுக்கியதாகவும் தி.மு.க. ஆட்சியில் குறைவாக நிதி ஒதுக்கியதாகவும் எம்.எல்.ஏ. வேலுமணி கவலை தெரிவித்தார்.
ஆனால் 2020 - 21ல் 21 ஆயிரத்து 585 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது 22 ஆயிரத்து 737 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மாநில தேர்தல் ஆணையம் குறித்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இன்றைய எதிர்கட்சியினர் ஆளும்கட்சியாக இருந்தபோது தேர்தலை நடத்த விடாமல் செய்து விட்டனர்.ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும் காரியங்கள் கடந்த ஆட்சியில் நடந்தன.

கடந்த 30 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 18 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. குறிப்பிட்ட காலத்தில் தேர்தலை நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியவில்லை.கடந்த காலங்களில் துறையில் சில நிர்வாக குளறுபடிகள் இருந்தன. அவற்றை சீர் செய்து முறையான நிர்வாகத்தை எதிர்காலத்தில் செயல்படுத்துவோம். எந்த நம்பிக்கையுடன் இந்த பொறுப்பை என்னிடம் கொடுத்தீர்களோ அது வீண் போகாத அளவிற்கு சிறந்த துறையாக இந்த துறையை உருவாக்குவேன் என்ற உறுதியை முதல்வருக்கு அளிக்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X