இந்தியருக்கு 10 ஆண்டு சிறை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியருக்கு பாலியல் குற்ற வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஒமஹா மாகாணம் நெப்ரஸ்கா நகரில் வசிப்பவர் பிரதிஷ் ஜெகன் செல்வராஜ், 35.இந்தியரான இவர், சமூக வலைதளத்தில் வந்த பாலியல் விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார்.பின், 15 மற்றும் 12 வயது சிறுமியருடன் உறவு கொள்ள பணம் செலுத்தவும் சம்மதித்தார்.

வாஷிங்டன் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியருக்கு பாலியல் குற்ற வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒமஹா மாகாணம் நெப்ரஸ்கா நகரில் வசிப்பவர் பிரதிஷ் ஜெகன் செல்வராஜ், 35.இந்தியரான இவர், சமூக வலைதளத்தில் வந்த பாலியல் விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார்.பின், 15 மற்றும் 12 வயது சிறுமியருடன் உறவு கொள்ள பணம் செலுத்தவும் சம்மதித்தார். விளம்பரதாரர்கள் கூறியதன் அடிப்படையில் உணவகம் ஒன்றுக்கு சென்றார்.அப்போது சிறுமியருடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்து, பிரதிஷ் ஜெகனை, சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ராபர்ட் எப் ரோஸிஸ்டர், குற்றம்சாட்டப்பட்ட ஜெகனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.தண்டனை காலம் முடிந்ததும் பாலியல் குற்றவாளி என்ற முத்திரையுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X