அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்துக்களுக்கு ஆதரவு ஆட்சி இல்லை இ.மு.க., மாநில தலைவர் பேட்டி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சிதம்பரம் : தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம் என இந்து முன்னேற்றக்கழக மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் தெரிவித்தார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று தரிசனம் செய்த பின் அவர் அளித்த பேட்டி:தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என அறிவித்திருப்பது மிகவும் தவறு. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி உள்ளிட்ட எந்த


சிதம்பரம் : தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம் என இந்து முன்னேற்றக்கழக மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் தெரிவித்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று தரிசனம் செய்த பின் அவர் அளித்த பேட்டி:

தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என அறிவித்திருப்பது மிகவும் தவறு. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி உள்ளிட்ட எந்த தலைவர்களுமே இந்துத்துவா ஆகம விதிகளில் தலையிட்டதில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என கூறி ஆகம விதிகளில் தேவையின்றி தலையிடுகிறார்.
ஏற்கனவே தில்லை நடராஜர் கோவிலில் கைவைத்து என்ன நடந்தது. கோவிலை தீட்சிதர்களே நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது தெரியும். எனவே மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம். ஹிந்துக்கள் மிரண்டால் நாடு கொள்ளாது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் அனைத்தையும் முதலில் துாய்மைபடுத்துங்கள். குடமுழுக்கு செய்யுங்கள். நிலங்களை மீட்க வேண்டும் என்று மாயையை ஏற்படுத்தி இந்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.

ஹிந்து கோவில்களை, சொத்துகளை அறநிலையத்துறை கண்காணித்து வழி நடத்துவது போல், இஸ்லாமிய ஜமாத், கிறிஸ்தவ சபைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லையென்றால் ஹிந்து கோவில்களை ஹிந்துக்களிடையே ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது இந்துக்களுக்கு ஆதரவான ஆட்சி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X