வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு தடையில்லை

Added : ஆக 25, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், பதில் மனு
வன்னியர்கள், சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட், சென்னை ஐகோர்ட், இட ஒதுக்கீடு

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து 20க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, எந்த தடையும் இல்லை என, தெரிவித்தது. அதன் அடிப்படையில், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 1983ல் கணக்கெடுப்பு நடத்தியது. அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.

வன்னியருக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சட்டசபை தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது; எனவே, இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை; அதனால், சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என அரசு வக்கீல் சண்முகசுந்தரம் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க மறுத்தனர். இட ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் ஆகியவை இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கூறி, வழக்கை செப்டம்பர் 14ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


latest tamil news


இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில், நியமனங்கள் நடந்து வருவதால், அதை தடுக்கும் வகையில் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என்று, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், 'அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள் ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை. அதனால், சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று, வாதிடப்பட்டது. இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இன்று முன்வைக்க, இரு தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை. இட ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை பணி நியமனங்கள் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் வழக்கை செப்.,14க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagharajan Lambotharan - chennai,இந்தியா
26-ஆக-202113:35:07 IST Report Abuse
Thiagharajan Lambotharan எம்பிசி பட்டியலில் உள்ள நாற்பது சாதியினருக்கு வெறும் இரண்டரை சதவிகித ஒதுக்கீடு. தங்களை தமிழர்களாக கருதாமல் சாதி வெறி கொண்டு அலையும் கும்பலுக்கு பத்தரை சதவிகித ஒதுக்கீடு. இதனால் எந்த சாதியினரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று எந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது? நீதிமன்றம் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டாமா? யாருமே பாதிக்கப்படவில்லை என்றால் ஏன் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன? தமிழ் சமுதாயத்தை பிளவு படுத்தும் ஜாதி கட்சிகளையும் ஜாதி வெறியர்களையும் அந்தந்த சமுதாய மக்களே புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
26-ஆக-202108:06:12 IST Report Abuse
C.SRIRAM அப்படியே வரி வசூலிலும் இட ஒதுக்கீடை அமல் செய்திடுங்கள் . அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் பொதுப்பிரிவில் உள்ள ஏழை மக்கள் சமூக நாதியற்றவர்கள். . பொதுப்பிரிவினரிடம் வரி மட்டும் வசூல் செய்வார்களாம் ஒரு சலுகையும் கிடையாதாம் . சமூகமாம் . நீதியாம் . எல்லாம் வெறும் பேச்சு. இது தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் .
Rate this:
Cancel
26-ஆக-202108:04:32 IST Report Abuse
Vittal anand rao. இவர்கள் என்ன வானத்தில் இரந்து குத்தவர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X