சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்னூர் ஆற்றில் அடித்து சென்ற குழந்தை உயிருடன் மீட்பு: உடனடியாக மீட்ட தீயணைப்பு துறைக்கு பாராட்டு

Added : ஆக 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
குன்னூர்: குன்னூரில் 300 மீட்டர் தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குழந்தையை, உடனடியாக உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை மக்கள பாராட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர். சுறா குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் மணிமேகலை, தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை சேன்விஸ்ரீ. இன்று(ஆக.,25) காலை விளையாடி கொண்டிருந்த போது, ஆற்றில் தவறி விழுந்துள்ளது. அப்போது பஸ்
குன்னூர், குழந்தை, உயிருடன் மீட்பு, தீயணைப்பு துறை, பாராட்டு,

குன்னூர்: குன்னூரில் 300 மீட்டர் தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குழந்தையை, உடனடியாக உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை மக்கள பாராட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர். சுறா குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் மணிமேகலை, தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை சேன்விஸ்ரீ. இன்று(ஆக.,25) காலை விளையாடி கொண்டிருந்த போது, ஆற்றில் தவறி விழுந்துள்ளது. அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே குழந்தை ஆற்றில் தத்தளித்து செல்வதை கண்டவர்கள் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.

நிலைய அலுவலர் மோகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விஜயகுமார், மதன்குமார், வெள்ளையன், குமார், ராமச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று ஆற்றில் குதித்து தேடினர். நீர்வீழ்ச்சியை கடந்து, 300 மீட்டர் தூரம் வரை அடித்து வந்த குழந்தை, தீயணைப்பு வீரர் விஜயகுமார் மீட்டார். சுயநினைவின்றி இருந்த குழந்தையை, தீயணைப்பு துறையினர், சி.பி.ஆர்., எனும் நுரையீரல் இதய உயிர்ப்பித்தல் முதலுதவியை அளித்ததால், சுயநினைவு திரும்பி அழ ஆரம்பித்தது.

தொடர்ந்து, அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றி குன்னூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். உடனடியாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய குன்னூர் தீயணைப்பு துறையினரை மக்கள் பாராட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
26-ஆக-202113:57:43 IST Report Abuse
திரு.திருராம் நாங்க இதை எல்லாம் மதிக்கமாட்டோம், 180கோடி சம்பளம் வாங்கி டூப்பு போட்டு எங்க ஈரோ காப்பாத்துனாதான் விசிலடிச்சு கட்டவுட் வச்சி பால ஊத்தி நாங்க உளுந்து எங்க குடும்பத்த நட்டாத்துல வுட்டு இன்னம் எவ்வளவோ, இதபோயி நியூசுன்னு போட்டுகிட்டிருக்கீய, போட்டு ரெண்டுநாளாயிபோச்சு ஒரு ஒத்த கமெண்ட்டு இல்ல, நடிகை நாய் தடுக்கி விழுந்திருந்தா இந்நேரம் 100 கமெண்டாவது வந்திருக்கும்,,,
Rate this:
Cancel
Emperor SR - Ooty,இந்தியா
25-ஆக-202120:43:27 IST Report Abuse
Emperor SR வாழ்க உங்கள் சேவை... நகர பகுதிகளில் ஆற்றின் ஓரங்களில் தடுப்பு சுவர் மிக அவசியம் என்பதை இந்த சம்பவம் மேலும் நிரூபிக்கிறது... விரைந்து நகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Cancel
KayD - Mississauga,கனடா
25-ஆக-202119:34:58 IST Report Abuse
KayD Thank god for all his mercies and sending his angels ( life savers) at the right time. வீரர்கள பாராட்டுக்கள் . இன்று இரவு தூக்கம் உங்களுக்கு ஒரு நிம்மதியாயின சந்தோஷ தூக்கம் வரும். God Bless .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X