பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை நிரம்பியதால் ஜூலை 23ம் தேதி, உபரி நீர் திறக்கப்பட்டது. தற்போது மழை தீவிரமடைந்துள்ளால், மீண்டும் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, ஆற்று மதகுகள் வழியாக, வினாடிக்கு, 1,400 கன அடி நீர்
 அமராவதி  உபரி நீர்  வெளியேற்றம் அதிகரிப்பு

உடுமலை : உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை நிரம்பியதால் ஜூலை 23ம் தேதி, உபரி நீர் திறக்கப்பட்டது. தற்போது மழை தீவிரமடைந்துள்ளால், மீண்டும் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, ஆற்று மதகுகள் வழியாக, வினாடிக்கு, 1,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.நேற்று காலை நிலவரப்படி, அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், 88.49 அடி நீர் மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,910.29 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு, 1,023 கன அடியாகவும், உபரி நீர் வெளியேற்றம், 1,175 கன அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X