விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.1390 கோடி அரசிடம் பெற கோவை கலெக்டர் உறுதி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை : ''கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த, அரசிடம் இருந்து, 1,390 கோடி ரூபாய் போர்க்கால அடிப்படையில் பெற்று வழங்கப்படும்,'' என்று கலெக்டர் சமீரன் உறுதியளித்தார்.கோவை பன்னாட்டு விமான நிலைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 628 ஏக்கர் நிலம், 24 தொகுதிகளாக


கோவை : ''கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த, அரசிடம் இருந்து, 1,390 கோடி ரூபாய் போர்க்கால அடிப்படையில் பெற்று வழங்கப்படும்,'' என்று கலெக்டர் சமீரன் உறுதியளித்தார்.
கோவை பன்னாட்டு விமான நிலைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 628 ஏக்கர் நிலம், 24 தொகுதிகளாக பிரித்து கையகப்படுத்தப்படுகிறது.நிலத்துக்கான இழப்பீடு இதுவரை, 29 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,390 கோடி ரூபாய் போர்க்கால அடிப்படையில் அரசிடம் இருந்து பெற்று நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.

தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, முன் மாதிரியான விமான நிலையமாக, கோவை பன்னாட்டு விமான நிலையம் உருவாக்கப்படும். விமானங்களுக்கு பறவைகள் அச்சுறுத்தலாக உள்ளன. இதற்கு தீர்வு காண, விமான நிலையத்தை ஒட்டியுள்ள இடங்களில் கழிவுகளை கொட்டாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

விமான நிலையத்தை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, எம்.பி., நடராஜன் ஆலோசனை வழங்கினார்.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X