பொது செய்தி

தமிழ்நாடு

10,000 நெல் மூட்டைகள் மழையில் நாசம்: விவசாயிகள் தர்ணா

Added : ஆக 25, 2021
Share
Advertisement
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, 10 ஆயிரம் நெல் மூட்டைகளை 3 மாதமாக கொள்முதல் செய்யாததால், முளைத்த நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த போலிப்பாக்கத்தில் அரசு நேரடி நெல் விற்பனை கொள்முதல் நிலையம் உள்ளது. கடந்த 3 மாதமாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை. இதனால் அங்குள்ள
10,000 நெல் மூட்டைகள் மழையில் நாசம்: விவசாயிகள் தர்ணா

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, 10 ஆயிரம் நெல் மூட்டைகளை 3 மாதமாக கொள்முதல் செய்யாததால், முளைத்த நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த போலிப்பாக்கத்தில் அரசு நேரடி நெல் விற்பனை கொள்முதல் நிலையம் உள்ளது. கடந்த 3 மாதமாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை. இதனால் அங்குள்ள மைதானத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து தினமும் விவசாயிகள் காத்திருந்தனர். அதற்குள் மூட்டையில் இருந்த நெல் முளைவிட தொடங்கியது.
இந்நிலையில், இந்த நெல் கொள்முதல் நிலையம் நேற்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இன்று பானாவரம் வருவாய் துறை அலுவலகம் முன், முளைந்த நெல் பயிர்களை தரையில் கொட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது: போலிப்பாக்கத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் விற்பனை நிலையத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தோம். கடந்த 3 மாதமாக அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைத்து நாசமானது.
நிறைய மூட்டைகளில் உள்ள நெல் முளை விட தொடங்கியுள்ளது. ஏற்கனவே கொள்முதல் செய்ததில், விவசாயிகளுக்கு 40 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது. இப்போது இந்த கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளது.இதைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நெல் கொள்முதல் விற்பனை நிலைய அதிகாரிகளை கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X