ஆப்கன் மக்கள் இந்தியா வர இ- விசா கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆப்கன் மக்கள் இந்தியா வர இ- விசா கட்டாயம்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (1)
Share
காபூல்: ஆப்கன் மக்கள், இ விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்திய விமானப்படை விமானம் மூலம் மீட்பு பணிகள் நடக்கின்றன. இந்தியர்கள் மட்டுமல்லாமல், ஆப்கனைச் சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள்
afghan, evisa, india,

காபூல்: ஆப்கன் மக்கள், இ விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்திய விமானப்படை விமானம் மூலம் மீட்பு பணிகள் நடக்கின்றன. இந்தியர்கள் மட்டுமல்லாமல், ஆப்கனைச் சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோரும் அகதிகளாக இந்தியாவிற்கு வருகின்றனர். ஆப்கன் மக்களும் இந்தியாவுக்கு வர முயற்சி செய்கின்றனர்.


latest tamil news



இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆப்கன் மக்கள் இ விசா மூலம் மட்டுமே இந்தியாவிற்கு வர வேண்டும். இந்தியா வர விரும்பும் ஆப்கன் மக்கள் இ விசாவுக்காக இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X