சசிகலா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
பெங்களூரு: லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதி பெற்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறையில் இருந்தபோது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து
Sasikala, சசிகலா, சொத்துக்குவிப்பு, பெங்களூரு, சிறை, லஞ்சம்

பெங்களூரு: லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதி பெற்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறையில் இருந்தபோது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பல வருடங்கள் ஆகியும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க சென்னையைச் சேர்ந்த கீதா என்ற சமூக ஆர்வலர் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார்.


latest tamil news




கடந்த 11ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத காரணத்தினால் நீதிபதி கண்டிப்புடன் இன்று(25ம் தேதி) விசாரித்தவரை உள்ள தகவல்களை குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் சீல் செய்யப்பட்ட உறையில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் சசிகலாவிற்கு எதிரான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு இந்த வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவின்படி இறுதியாக சசிகலாவிற்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
26-ஆக-202115:36:51 IST Report Abuse
Vena Suna பத்து வருடம் வரை தண்டனை உண்டு லஞ்சத்திற்கு. அடப்பாவமே...
Rate this:
Cancel
Krishnaveni .K - Coimbatore,இந்தியா
26-ஆக-202108:50:31 IST Report Abuse
Krishnaveni .K அசிங்கமான வாழ்க்கை .இன்னொரு பெண்ணின் தயவில் வாழ்ந்து, அவரின் ஈமச் சடங்குகளை அவர் முறையில் செய்யாமல் நல்லவர் போல் நடித்து , இப்பொழுது பேராசை அரசியலுக்கு வருவதற்கு ...கேவலம்
Rate this:
Cancel
Valliappan - Tiruvannamalai,இந்தியா
26-ஆக-202108:22:32 IST Report Abuse
Valliappan It's only the political revenge
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X