பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஈரோடு: கேங்க்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமனம் வழங்கக்கோரி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முத்தரப்பு ஒப்பந்தப்படி கேங்க்மேன் பயிற்சி காலத்தை, மூன்று மாதமாக குறைக்க வேண்டும். கேங்க்மேன் தொழிலாளர்களின் தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக மாற்ற

ஈரோடு: கேங்க்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமனம் வழங்கக்கோரி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முத்தரப்பு ஒப்பந்தப்படி கேங்க்மேன் பயிற்சி காலத்தை, மூன்று மாதமாக குறைக்க வேண்டும். கேங்க்மேன் தொழிலாளர்களின் தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக மாற்ற வேண்டும். சொந்த மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். கேங்க்மேன் பணி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் வழங்கப்படாத, 5,??? பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X