பொது செய்தி

இந்தியா

சல்மான் கானை தடுத்த வீரருக்கு வெகுமதி: சி.ஐ.எஸ்.எப்.,

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
மும்பை: மும்பை விமான நிலைய முனையத்திற்குள் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பாலிவுட் நடிகர் சல்மான் கானை தடுத்து நிறுத்திய சி.ஐ.எஸ்.எப்., வீரருக்கு, சிறப்பாக பணியாற்றியதற்காக பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை கத்ரீனா கைப் நடிக்கும் 'டைகர் 3' படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக மும்பை
salmankhan, cisf, mumbai, airport, tiger3, சல்மான்கான், சிஐஎஸ்எப்

மும்பை: மும்பை விமான நிலைய முனையத்திற்குள் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பாலிவுட் நடிகர் சல்மான் கானை தடுத்து நிறுத்திய சி.ஐ.எஸ்.எப்., வீரருக்கு, சிறப்பாக பணியாற்றியதற்காக பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை கத்ரீனா கைப் நடிக்கும் 'டைகர் 3' படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த சல்மான் கான், விமான நிலைய முனையத்திற்குள் செல்ல முயன்றார். ஆனால், அங்கு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து நிறுத்தினார். பாதுகாப்பு சோதனைகளை நிறைவு செய்து ஒப்புதல் பெறும்படி அறிவுறுத்தினார்.

இந்நிலையில், அந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவின.


latest tamil news


இதனை மறுத்துள்ள சி.ஐ.எஸ்.எப்., டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: '' சி.ஐ.எஸ்.எப்., அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆதாரம் இல்லை. உண்மையாக கடமையை நிறைவேற்றுவதில் முன்மாதிரியாக செயல்பட்ட அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது,''. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
26-ஆக-202110:48:12 IST Report Abuse
தஞ்சை மன்னர் இதேபோல நம்ம நரேந்திர தாமோதர தாஸ் போன கெலிகாப்டர் சோதனை செய்த ஒரு அபிசருக்கு சோதனை தான் மிச்சம்
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
28-ஆக-202114:32:00 IST Report Abuse
kudiyanavanநீ மூடு .முதல்ல ஆப்கானிஸ்தான் கிளம்பு...
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
26-ஆக-202110:18:11 IST Report Abuse
Rajalakshmi அப்பாடி சினிமா கூத்தாடிகளுக்கு கட்டுக்கடங்கா திமிர். அரசியல்வாதிகள் இவர்களுக்கு துணை போவதால். இந்த திமிர் கூத்தாடி பலரை விபத்தில் கொன்றதற்கு வழக்கு நடக்கையில் பிஜேபியின் உதவாக்கரை எம்.பி. பாலிவுட் கூத்தாடி ஹேமமாலினி பயங்கரமாக பரிந்து பேசியது மறக்கலாகாது. மோடியுடன் பட்டம் விட்டு நன்கு தாஜா செய்திருந்தான். தண்டனை ஏதும் அனுபவிக்காமல் தப்பி விட்ட கூத்தாடி. தலீபான் கையால் கோர சாவு இந்த கூத்தாடிகளுக்கு வரவேண்டும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஆக-202104:49:56 IST Report Abuse
meenakshisundaram இங்கே தமிழ் நாட்டில் அடித்து மீறிய திமுக நிர்வாகியை கண்டித்த காவல் துறை அலுவலர் 'ஆயுதப்படைக்கு ' மாற்றம் ? என்னங்க திராவிட நாகரீகம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X