சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பெண் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, அ.தி.மு.க., பெண் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே திருவலம் ஓல்டு எம்.பி.டி., சாலையைச் சேர்ந்தவர் சங்கர், 40. இவர் மனைவி சுலோச்சனா, 34. இவர் வேலுார் மாவட்ட அ.தி.மு.க., மகளிர் அணி இணைச் செயலாளராகவும், திருவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த
அ.தி.மு.க., பெண் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

வேலுார்: வேலுார் அருகே, அ.தி.மு.க., பெண் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே திருவலம் ஓல்டு எம்.பி.டி., சாலையைச் சேர்ந்தவர் சங்கர், 40. இவர் மனைவி சுலோச்சனா, 34. இவர் வேலுார் மாவட்ட அ.தி.மு.க., மகளிர் அணி இணைச் செயலாளராகவும், திருவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த 13ம் தேதி தலைவர் பதவியில் இருந்து ஆறு மாதம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நேற்று இரவு 9:45 மணிக்கு சுலோச்சனா குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அவரது ஓண்டா அமேஸ் காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தார். இரவு 10:00 மணிக்கு அவர் காரின் பின் பக்கம் தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு வந்த சுலோச்சனா குடும்பத்தினர் தீயை அணைத்தனர். புகார்படி திருவலம் போலீசார் சுலோச்சனா வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர்.
அதில், கார் அருகே பெட்ரோல் நிரப்பி திரியுடன் உடைந்த பாட்டில் கிடந்தது. இதனால் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்ததில், காரில் மர்ம நபர்கள் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 40, என்பவரை இன்று கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் மேலும் 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுலோச்சனா கூறியதாவது: நான் திருவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்த போது, பதவியை ராஜிமானா செய்யும்படி தி.மு.க.,வினர் பிரச்சனை செய்தனர். என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். இதனால் விசாரணை இல்லாமல், முன் அறிவிப்பு கொடுக்காமல் என்னை கூட்டுறவு பதிவாளர் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
என் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சிலர் இது மாதிரி செய்துள்ளனர். என்னையும், குடும்பத்தினரையும் கொலை செய்ய இந்த சம்பவம் நடந்துள்ளது. எப்படியோ நானும், குடும்பத்தினரும் தப்பி விட்டோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X