அமராவதி ஆற்றில் மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆற்றில் மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Added : ஆக 25, 2021
Share
கரூர்: கரூர் அருகே அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகள் மற்றும் 14 மாடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரம் காவல்நிலையத்துக்குட்பட்ட வெங்கல்பட்டி பகுதி என்ற இடத்தில் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளப்படுவதாக, அந்த பகுதி வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் கிடைத்தது.
அமராவதி ஆற்றில் மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

கரூர்: கரூர் அருகே அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகள் மற்றும் 14 மாடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரம் காவல்நிலையத்துக்குட்பட்ட வெங்கல்பட்டி பகுதி என்ற இடத்தில் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளப்படுவதாக, அந்த பகுதி வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரில் ஆய்வு செய்த வி.ஏ.ஓ., சின்னதாராபுரம் போலீஸில் புகார் அளித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் போலீசார் வருவதை பார்த்து, மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். இதையடுத்து சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 7 மாட்டுவண்டிகளும், பயன்படுத்தப்பட்ட 14 மாடுகளையும் சின்னதாராபுரம் போலீசார் பறிமுதல் செய்ததோடு, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X