பணமாக்குதல் பற்றி ராகுலுக்கு புரிதல் உண்டா? நிதியமைச்சர் கேள்வி

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு சமீபத்தில் அரசு சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தை அறிவித்தது. அதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதனை காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு இத்திட்டத்தை பற்றிய புரிதல் உண்டா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.கோவிட் பெருந்தொற்றால் போடப்பட்ட
Monetisation, Nirmala, Nirama sitharaman, Rahul, Rahulgandhi, congress, government,

புதுடில்லி: மத்திய அரசு சமீபத்தில் அரசு சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தை அறிவித்தது. அதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதனை காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு இத்திட்டத்தை பற்றிய புரிதல் உண்டா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவிட் பெருந்தொற்றால் போடப்பட்ட ஊரடங்கினால் உலக பொருளாதாரம் சரிவை சந்தித்தது. இந்திய உள்நாட்டு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதார சரிவிலிருந்து மீள 20 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்தது. பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை விற்பனை செய்து பணமாக்குகிறது. அதன் தொடர்ச்சியாக அரசின் சொத்துக்களை குத்தகைக்குவிடும், தேசிய பணமாக்குதல் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.


latest tamil news


காங்கிரஸ் எம்.பி., ராகுல் அரசின் இம்முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேட்டியளித்தார். “அரசின் சொத்துக்களை குத்தகைக்குவிடும் மத்திய அரசின் முடிவு தவறானது. நீண்டகாலமாக நஷ்டத்தில் இருக்கும் தொழில்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். ஆனால் பா.ஜ. அரசு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த சொத்துக்களை வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு அளிக்கிறது.” என்றார்.

காங்., கட்சி சார்பில் வெளியான அறிக்கையில், “சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்று பா.ஜ., குற்றம்சாட்டியது. ஆனால் இப்போது காங்கிரஸ் அரசு உருவாக்கிய சொத்துக்களை தனியார்மயமாக்குகிறது. தவறான நிர்வாகத்தை மறைக்க இதைச் செய்கிறது.” என்றது.


latest tamil news



இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பதிலடி தந்துள்ளார். "பணமாக்குதல் என்றால் என்ன? என்று ராகுலுக்கு புரிகிறதா? நாட்டின் வளங்களை விற்று பின்னடைவை ஏற்படுத்தியது காங்கிரஸ் தான்,” என்று கூறினார்.

மத்திய மகளிர் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பேட்டியில், “சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு மாவட்ட மருத்துவமனை கூட அமைக்கவில்லை. அவர்களின் பிரச்னை என்னவென்றால், முதலீட்டை திரும்பப் பெறுவதால் 6 லட்சம் கோடி ரூபாய் வரும். அது அவர்களுக்கு பிரச்னையாக உள்ளது.” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ignatius Valentine - Chennai,இந்தியா
27-ஆக-202108:36:18 IST Report Abuse
Ignatius Valentine விக்கிறது மட்டுமே குறிக்கோள்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-ஆக-202113:44:54 IST Report Abuse
r.sundaram இப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்று எங்களுக்கு தெரிய வில்லையே, மெத்தப்படித்த, பெரிய பொருளாதார நிபுணர்கள் என்று பெயர் எடுத்தவர் கூட இப்படி எல்லாம் பணம் பண்ணலாம் என்று எங்களுக்கு சொல்லித்தர வில்லையே, என்ற ஆதங்கம் இருக்கிறது. அதுதான் விஷயம் என்ன என்று தெரிந்து கொள்ளாமலேயே வெடிக்கிறார்.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
26-ஆக-202100:35:03 IST Report Abuse
HSR அவருக்கு பட்டாயா இட்டாலி பாட்டிவீடு இத தவிர வேறொன்னும் தெரியாதுன்னு தெரிந்தும் ஏனிந்த கேள்வி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X