பொது செய்தி

தமிழ்நாடு

4 மாதத்திற்குப் பின்னர் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா திறப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சேலம்: கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளதால்குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்குள் பொதுமக்கள் செல்லஅனுமதி தரப்படவில்லைவழக்கமாக சனி மற்றும் ஞாயிறு நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் வன உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க கட்டுக்கடங்காத
 4 மாதத்திற்குப் பின்னர்   சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா திறப்பு

சேலம்: கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளதால்குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்குள் பொதுமக்கள் செல்லஅனுமதி தரப்படவில்லை
வழக்கமாக சனி மற்றும் ஞாயிறு நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் வன உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் வரும். குறிப்பாக காதலர்கள் திரளாக வந்து சுற்றி பார்த்து செல்வார்கள்.இந்த வன உயிரியல் பூங்காவில் மயில் மற்றும் மான், குரங்கு,மலைப் பாம்பு, முதலை போன்றவை வளர்க்கப்பட்டு வருகிறது .இது தவிர பறவைகளும் வளர்க்கப்படுகிறது.
வன உயிரியல் பூங்கா திறக்கப் படவில்லை என்றாலும், வனத்துறையினர் தினமும் வந்து பூங்காவை பராமரித்து வந்தனர் .இந்த நிலையில் இன்று முதல் பூங்கா திறக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.இதையடுத்து சேலம் கோரிமேடு அடிவாரத்தில் உள்ளகுரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது.
இதனை அறிந்த பொதுமக்கள் திரளாக பூங்காவிற்கு வந்தனர். முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர சுற்றி பார்க்க வருபவர்களுக்கு உடல் வெப்பம் பார்க்கப்பட்டது .கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வருபவர்கள் தனிமனித இடைவெளி பின்பற்றி சுற்றி பார்க்க வேண்டும் என்றும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தும் வருகிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X