சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது 20 லிட்டர் ஊறல் அழிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
காங்கேயம்:நத்தக்காடையூர் அருகேசாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்காட்டுவலசு கிராம பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, தலைமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணிக்கு மேட்டுக்காட்டுவலசு

காங்கேயம்:நத்தக்காடையூர் அருகேசாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்காட்டுவலசு கிராம பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, தலைமையிலான போலீசார் நேற்று காலை 8:00 மணிக்கு மேட்டுக்காட்டுவலசு கிராமத்திற்கு நேரில் வந்து திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மணி (59) என்பவரது வீட்டில் சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. மதுவிலக்கு போலீசார் மணியை கைது செய்து அங்கிருந்த 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அங்கு ஊறல் போடப்பட்டிருந்த 20 லிட்டர் சாராயமும் போலீசாரால் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட மணியை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். திருப்பூர் மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X