பொது செய்தி

தமிழ்நாடு

ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு ரூ. 2.75 கோடியில் சாலை, மேம்பாலம் இன்று முதல் முட்டல் ஏரி, நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி பகுதிக்கு, 2.75 கோடி ரூபாயில் புதிதாக தார்சாலை, இரு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதித்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம், ஆத்துார், கல்வராயன் மலை அடிவாரத்தில், முட்டல் கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரி மற்றும் வனப்பகுதியில், புள்ளிமான், காட்டெருமை, காட்டுப்பன்றி, மயில்
 ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு ரூ. 2.75 கோடியில் சாலை, மேம்பாலம் இன்று முதல் முட்டல் ஏரி, நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, முட்டல் ஏரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சி பகுதிக்கு, 2.75 கோடி ரூபாயில் புதிதாக தார்சாலை, இரு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதித்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார், கல்வராயன் மலை அடிவாரத்தில், முட்டல் கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரி மற்றும் வனப்பகுதியில், புள்ளிமான், காட்டெருமை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள், நீர் வீழ்ச்சிகள் உள்ளன. அவற்றை, வன ஆர்வலர்கள், சுற்றுலா பயணியர் தங்கி பார்வையிட, 'சூழல் சுற்றுலா' திட்டத்தில் மூங்கில் குடில் கொண்ட நான்கு தங்கும் விடுதிகள் உள்ளன. ஏரியில், படகு சவாரி, நீர்வீழ்ச்சியில் குளிக்க, விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர்.

ஆணைவாரி நீர்வீழ்ச்சி பகுதியில், பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதிகள் உள்ளன.தற்போது, கொரோனா பரவல் காரணமாக, முட்டல் ஏரி படகு சவாரி, ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு செல்வதற்கு, வனத்துறை தடை விதித்துள்ளது. ஏரி பகுதியொட்டி மலர் செடிகள் வைத்து, கண் கவரும் வகையில் பூங்கா அமைத்துள்ளனர்.

கடந்த, 2018, அக்., 2ல், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டபோது, ஆணைவாரி நீர் வீழ்ச்சிக்கு சென்ற 350க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர். அவர்களை, வனத்துறையினர் மீட்டு வந்தனர். நீர் வீழ்ச்சி வழிப்பாதை மண் சாலை சீரமைத்து, இரண்டு நீரோடை பகுதிகளில் பாலம் அமைக்க வேண்டும் என, சுற்றுலா பயணிகளின் கோரிக்கை விடுத்தனர். மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் (2020-21ல்) கீழ், முட்டல் - கிடார் வரை, 4.500 கி.மீ., துாரம், 2.75 கோடி புதிதாக தார்ச்சாலை, காட்டாறு வெள்ளம் ஏற்பட்ட இடத்தில் பெரிய பாலம், மற்றொரு நீரோடையில் சிறிய பாலம், 20 இடங்களில் தரைப்பாலம், நான்கு இடங்களில் தடுப்புச்சுவர் என, அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைத்த சாலை, பாலத்தின் வழியாக, முட்டல், கிடார், பட்டிவளவு, மேல்கிடார், தொரண்டூர் உள்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர். இன்று முதல், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி வழங்கியதால், 50க்கும் மேற்பட்டோர் வந்தனர். நீர் வீழ்ச்சி, சூழல் சுற்றுலா பூங்கா மற்றும் முட்டல் ஏரியின் படகில் சென்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X