சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'தப்பான ஆட்களைச் சேர்த்துட்டோமோ?'

Added : ஆக 25, 2021
Share
Advertisement
'தப்பான ஆட்களைச் சேர்த்துட்டோமோ?' 'அரசியலில் ஏற்றம் வரும்போது சரியான நபர்களை உடன் வைத்திருக்க வேண்டும்; இல்லையெனில், நம்மை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவர். சித்துவுக்கு இது இப்போது தான் தெரிகிறது' என்கின்றனர் டில்லியில் உள்ள அரசியல்வாதிகள். பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அமரீந்தருக்கும், முன்னாள்

அக்கம் பக்கம்


'தப்பான ஆட்களைச் சேர்த்துட்டோமோ?'



'அரசியலில் ஏற்றம் வரும்போது சரியான நபர்களை உடன் வைத்திருக்க வேண்டும்; இல்லையெனில், நம்மை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவர். சித்துவுக்கு இது இப்போது தான் தெரிகிறது' என்கின்றனர் டில்லியில் உள்ள அரசியல்வாதிகள். பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அமரீந்தருக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் கட்சி மேலிடத்திடம் மாறி மாறி புகார் அளித்தனர். பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இவர்களது மோதல், கட்சியின் வெற்றியை பாதிக்கும் என கருதிய காங்., மேலிடம், இருவரையும் சமாதானப்படுத்தியது.

சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்., தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதற்கு பின் தான் சித்து சில தவறுகளைச் செய்தார். மல்வீந்தர் மாலி, பியார்லால் கார்க் ஆகியோரை தன் ஆலோசகர்களாக நியமித்தார். இவர்கள் இருவரும் காஷ்மீர், பாகிஸ்தான் ஆகிய விஷயங்கள் குறித்து தங்கள் இஷ்டத்துக்கு கருத்து தெரிவித்தனர்; இது, சித்துவுக்கு மட்டுமல்லாது காங்., மேலிடத்துக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியது. இதைக் கேள்விப்பட்ட அமரீந்தர், 'இப்படி ஆட்களை எல்லாம் கூட வைத்து கும்மி அடித்தால் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாது' என, கொந்தளித்தார்.

சித்துவும், 'தப்பான ஆட்களை சேர்த்து விட்டோமோ...' என யோசனையில் ஆழ்ந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X