சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
உங்களைப் போன்றவர்கள் அமைதியாக இருந்தால், எந்த மதங்களுக்கு இடையேயும் சண்டை வராது... நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்காது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை: ஹார்வர்டு பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர், 1994ல் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், இஸ்லாமிய சக்திகளை, ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும் இணைந்து எதிர்கொள்வர் என


பேச்சு, பேட்டி, அறிக்கை

உங்களைப் போன்றவர்கள் அமைதியாக இருந்தால், எந்த மதங்களுக்கு இடையேயும் சண்டை வராது... நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்காது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை: ஹார்வர்டு பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர், 1994ல் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், இஸ்லாமிய சக்திகளை, ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும் இணைந்து எதிர்கொள்வர் என எழுதியுள்ளார். அந்த நிலை தான் வரும் போலிருக்கிறது.


'நமக்கே ஆலோசனை கூறும் அளவுக்கு கம்யூ.,க்கள் வளர்ந்து விட்டனரா...' என, தி.மு.க.,வினர் கோபப்பட போகின்றனர்...' என, 'போட்டு'க் கொடுக்கத் தோன்றும் வகையில், மாநில மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:
நாட்டின் நிதி நிலைமை நெருக்கடியில் இருக்கும்போது, மக்களின் வாங்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு தரப்படும் ஊதியம், சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும். அப்போது தான் வரி வருவாயும் அதிகரிக்கும். எனவே, அரசு ஊழியர்களுக்கு உரிய படிகள் வழங்கப்பட வேண்டும்.


'ஜனநாயகம் மிஞ்சினால், அநாகரிகம் ஆகிவிடும் போலிருக்கிறதே...' என, ஜாடையாக சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு பேட்டி:
அண்மையில் நியமிக்கப்பட்ட, எட்டு கவர்னர்களில் ஒருவர் கூட பெண் இல்லை என பேட்டியளித்ததும், கட்சியினர் என்னை அணுகி, அந்த புள்ளி விபரங்களை தந்தனரே தவிர, அப்படி பேசியதற்காக கண்டிக்கவில்லை. எங்கள் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது.


'உண்மையான தமிழர் வரலாறு என, தி.மு.க.,விடம் கேட்டால், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களின் வீர தீர செயல்களை பட்டியலிட்டு விடுவர். எனவே, உண்மையான தமிழர் வரலாறு இப்போதைக்கு கிடைப்பது கஷ்டம் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
: புலம்பெயர் நாடுகளில், தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதுாறு பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து முறியடிக்க உலகத் தமிழர்கள் துணை நிற்க வேண்டும்.


'மத பழமைவாதம் பற்றி நீங்கள் புரிந்து கொண்டதே பெரிய விஷயம் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் பேச்சு:
மத அடிப்படைவாத சீரழிவுக்கு ஆப்கானிஸ்தானே உதாரணமாக உள்ளது. மதத்தால் சமூகத்தில் நல்லிணக்கம் இல்லாமல் போனால் அது எவ்வாறு மக்களையும், நாட்டையும் பாதிக்கும் என்பதை ஆப்கன் கற்றுத் தருகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X