இலங்கையில் எஸ்டேட் வாங்கிய பெண் அதிகாரி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

இலங்கையில் எஸ்டேட் வாங்கிய பெண் அதிகாரி!

Added : ஆக 25, 2021 | கருத்துகள் (1)
Share
இலங்கையில் எஸ்டேட் வாங்கிய பெண் அதிகாரி!''விளையாட்டு ஒதுக்கீட்டுலயும், 'விளையாடி' இருக்கா ஓய்...'' என, பூடகமாக பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''புரியுற மாதிரி சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய். ''தமிழக மின் வாரியத்துல, விளையாட்டு வீரர்கள், 'கோட்டா'வுல வேலைக்கு ஆள் எடுப்பா... சிலர் போலி கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ்களை குடுத்து வேலையில


 டீ கடை பெஞ்ச்


இலங்கையில் எஸ்டேட் வாங்கிய பெண் அதிகாரி!


''விளையாட்டு ஒதுக்கீட்டுலயும், 'விளையாடி' இருக்கா ஓய்...'' என, பூடகமாக பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''புரியுற மாதிரி சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''தமிழக மின் வாரியத்துல, விளையாட்டு வீரர்கள், 'கோட்டா'வுல வேலைக்கு ஆள் எடுப்பா... சிலர் போலி கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ்களை குடுத்து வேலையில சேர்ந்திருக்கா ஓய்...

''இது சம்பந்தமா, வாரியத்துக்கு நிறைய புகார்கள் குவியவே, அனைத்து ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே உத்தரவு போட்டா...

''ஆனா, அப்படி ஆய்வு செஞ்சா நிறைய பேர் மாட்டிப்பாங்கறதுனால, அதுக்கு சிலர் முட்டுக்கட்டை போட்டுண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''மானாவாரியா மாமூல் வேட்டை ஆடியவரை, துாக்கி அடிச்சுட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.

''போலீஸ் தகவலா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''ஆமாம்... பெரம்பலுார்ல இருந்த ஒரு போலீஸ் அதிகாரி, புகார்ல சம்பந்தப்பட்டவங்களை அழைச்சு, கட்டப்பஞ்சாயத்து பேசி, பணத்தை வாங்கிட்டு, எப்.ஐ.ஆர்., போடாம அனுப்பிடுவாரு... மது விற்பனை, மணல் கடத்தல், 'குட்கா' விற்பனைன்னு மாமூல்ல குளிச்சிட்டு இருந்தாரு பா...

''மாசா மாசம் மாமூல் கேட்டு, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களுக்கு நெருக்கடி தந்தார்... தராதவங்களை பொது இடத்துல ஒருமையில திட்டியிருக்காரு பா...

''அதிகாரி மேல ஏகப்பட்ட புகார்கள், திருச்சி ஐ.ஜி.,க்கு போனது... இதனால அதிகாரியை, திருநெல்வேலி சிட்டி குற்றப் பதிவேடுகள் பிரிவுக்கு துாக்கி அடிச்சிட்டாங்க பா...

''இவரது மாமூல் வேட்டைக்கு உடந்தையா இருந்த ஏட்டு ஒருத்தரை தஞ்சைக்கு மாத்திட்டாங்க... இன்னும் ரெண்டு, மூணு எஸ்.ஐ.,க்களையும் இடம் மாத்தப் போறதா சொல்றாங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.

''நண்பன் சரவணனைப் பார்க்கப் போகணும்... கடைசி விஷயத்தைச் சொல்லிட்டுக் கிளம்பறேன்... பெண் அதிகாரி பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிட்டு இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''போன ஆட்சியில, கொங்கு மண்டலத்துல செல்வாக்கா இருந்த, 'மாஜி' அமைச்சரின் உறவினரான பெண் அதிகாரி, சமீபத்துல பக்கத்து மாவட்டத்துக்கு மாற்றப்பட்டாங்க... இந்த அதிகாரியின் தந்தை வீட்டுலயும் சமீபத்துல, 'ரெய்டு' நடந்துச்சுங்க...

''அதுல, 'மாஜி' அமைச்சர் தொடர்பா எந்த ஆவணங்களும் சிக்கலைன்னாலும், திருவள்ளூர், கோவை, திண்டுக்கல்னு பல ஊர்கள்ல பெண் அதிகாரிக்கு சொத்துக்கள் இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியிருக்காம்... கோவை - அவிநாசி சாலையில, பிரபல கல்லுாரிக்கு பின்புறம் பஞ்சமி நிலத்தை, தன் பெயருக்கு அதிகாரி பட்டா மாத்தி இருக்கிறதையும் கண்டுபிடிச்சிருக்காங்க...

''மாஜி அமைச்சர், 'பினாமி' பெயர்கள்ல இலங்கையில, 700 ஏக்கர்ல தேயிலை எஸ்டேட் வாங்கி போட்டிருக்காராம்... அதுல, பெண் அதிகாரி பெயர்லயும் சொத்து வாங்கியிருக்காங்க...

''அதிகாரியின் வங்கிக் கணக்குல பல லட்சம் ரூபாய் வந்ததுக்கு விளக்கம் தராதது, அவர் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தது பற்றி எல்லாம், விஜிலென்ஸ் தரப்பு தீவிரமா விசாரணை நடத்திட்டு இருக்குதுங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி
.
ஒலித்த போனை எடுத்த அண்ணாச்சி, ''மதுராந்தகியா... சொல்லுங்க சிஸ்டர்...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X