சஞ்சய் ராவத்துக்கு எதிரான பெண்ணின் மனு தள்ளுபடி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மும்பை:சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் துாண்டுதலுடன், தன்னை சிலர் துன்புறுத்தியதாகக் கூறி, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.துன்புறுத்தல்இங்கு, மும்பையைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர், 2013, 2018ம் ஆண்டுகளில் சிலர் தன்னைப்
 சஞ்சய் ராவத்துக்கு எதிரான பெண்ணின் மனு தள்ளுபடி

மும்பை:சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் துாண்டுதலுடன், தன்னை சிலர் துன்புறுத்தியதாகக் கூறி, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.


துன்புறுத்தல்

இங்கு, மும்பையைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர், 2013, 2018ம் ஆண்டுகளில் சிலர் தன்னைப் பின்தொடர்ந்து வந்து துன்புறுத்தியதாக, போலீசாரிடம் மூன்று புகார்களை அளித்துள்ளார்.

சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் ராவத்தின் துாண்டுதலுடன், தன் கணவர் உட்பட சிலர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் புகார் அளித்தார்.எனினும், போலீஸ் துணை கமிஷனர் அந்த புகார்களை ஏற்று வழக்குப்பதிவு செய்ய தவறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், அந்த புகார்களை விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட கோரியும், கடமையை செய்யத் தவறிய துணை கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மும்பை உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


அறிவுறுத்தல்


இந்த மனுவை, கடந்த ஜூன் மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது.பின், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பெண் அளித்த புகார்களுக்கு ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கை முடித்து வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மனு, நீதிபதிகள் ஷிண்டே மற்றும் ஜமதார் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், கீழ் நீதிமன்றத்தில் சென்று முறையிடவும் அந்த பெண்ணுக்கு அறிவுறுத்தல் தரப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X