எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு: அமலாக்கத் துறை, சி.பி.ஐ., குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (4+ 9)
Share
Advertisement
புதுடில்லி :'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., தாக்கல் செய்யும் வழக்கு விசாரணைகள்எளிதில் முடிவுக்கு வராமல், காரணமின்றி காலதாமதமாகிறது' என, உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. 'இதை நிவர்த்தி செய்ய, தேவையான எண்ணிக்கையில் ஊழியர்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு தான் செய்து தர வேண்டும்' என, தலைமை நீதிபதி என்.வி.ரமணா
 எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு விசாரணை , காலதாமதம்! அமலாக்கத் துறை, சி.பி.ஐ., குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

புதுடில்லி :'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீது, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., தாக்கல் செய்யும் வழக்கு விசாரணைகள்எளிதில் முடிவுக்கு வராமல், காரணமின்றி காலதாமதமாகிறது' என, உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது. 'இதை நிவர்த்தி செய்ய, தேவையான எண்ணிக்கையில் ஊழியர்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு தான் செய்து தர வேண்டும்' என, தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும், பதவியில் இருப்பவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும் கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.


பற்றாக்குறை



இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த வழக்கில் அரசு தரப்புக்கு உதவு வதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் ஹன்ஸாரியா கூறுகையில், ''பதவியில் இருப்பவர்களின் மீதான வழக்குகள் தொடர்பாக, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கைகளை கண்டால் அதிர்ச்சியாக உள்ளது. ''இதை சரிசெய்ய, அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வழக்குகளை விரைவாக முடிக்க முடியும்,'' என்றார்.இதையடுத்து, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதாவது:நாங்கள் விசாரணை அமைப்பினரை பற்றி பேசி, அவர்களின் மன உறுதியை குறைக்க விரும்பவில்லை. அவர்களின் அறிக்கைகளே அவை அனைத்தையும் பறைசாற்றி விடும்.
அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ.,யின் முடிக்கப்படாத 200 வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதை சொல்வதற்கு வருத்தமாகத் தான் உள்ளது.சில வழக்குகளில், 10 - 15 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என்று கூட விளக்கம் அளிக்கப்படவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதால் மட்டுமே பயனில்லை.

அமலாக்கத் துறையின் 76 வழக்குகள், 2012 முதல் நிலுவையில் உள்ளன. சி.பி.ஐ.,யின் 58 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 2000த்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கூட முடிவடையாமல் உள்ளன.சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் ஏற்கனவே இதுபற்றி முறையிட்டுள்ளோம். அவர் தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த வழக்கை எடுத்துக் கொண்டாலும் சி.பி.ஐ., விசாரணை கோருவது இன்றைய நடைமுறையாகி விட்டது. அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ.,யிலும் நீதித் துறையை போல ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. சொலிசிட்டர் ஜெனரல் தான், இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, ஊழியர்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.அதேபோல, தண்டனை பெற்ற இந்நாள் அல்லது முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின், மேல்முறையீடு மனுக்களுக்கு முன்னுரிமை தரக் கூடாது. அவை, சாதாரண முறையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கண்காணிப்பு கமிட்டி



இதற்கு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், ''பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில், வெளிநாடுகளில் சொத்துக்கள், சேமிப்புகள் இருப்பதால், விசாரணையில் காலதாமதம் ஏற்படுகிறது.''வழக்கு விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்குமாறு, விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,'' என்றார்.இந்த வழக்கில், அரசுக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் ஹன்ஸாரியா பதில் அளிக்கையில், ''விசாரணை அமைப்புகள் முன் நீண்ட நாட்களாக வழக்கு நிலுவையில் இருந்தால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு கமிட்டி உருவாக்க வேண்டும்,'' என்ற பரிந்துரையை முன்வைத்தார்.இந்த பரிந்துரை குறித்து பதில் அளிக்குமாறு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, ''பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற வழக்குகளை, அம்மாநில அரசுகள் எளிதாக திரும்ப பெற்று வருகின்றன.''முந்தைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்ததாக அதற்கு காரணம் சொல்லப்படுகிறது,'' என, வழக்கறிஞர் விஜய் ஹன்ஸாரியா தெரிவித்தார்.இதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:மாநில அரசுகள் வழக்குகளை திரும்ப பெறுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

அவை உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை திரும்ப பெற, மாநில அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால் திரும்ப பெறும் முன், உயர் நீதிமன்றத்தை நாடி, அவர்கள் ஆராய்ந்து கூறிய பின் தான், வழக்கை வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Advertisement




வாசகர் கருத்து (4+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
26-ஆக-202109:11:23 IST Report Abuse
duruvasar தாமதம் ஆவதால் தான் ராஜா. ராணி மாதிரி உல்லாசமாக வலம் வரமுடிகிறது. வழக்கு போடப்பட்டதாலேயே அவர்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா ? என்ன தயா இதெல்லாம்.
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
26-ஆக-202107:03:13 IST Report Abuse
ஆனந்த் சாதாரண மக்கள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது .. நீதிமன்றத்தின் ஆதரவுடன் வழக்குகள் தாமதம் ஆகிறது . அதை சரி செய்ய துப்பில்லை
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-ஆக-202106:34:59 IST Report Abuse
Kasimani Baskaran முதலில் கேவலமான அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி சீரழிகிறது என்றுதான் நினைத்திருந்தேன் - ஆனால் உண்மையில் நீதித்துறையின் பிடியில் சிக்கித்தான் நாடு சின்னாபின்னமாகி விட்டது என்பது இப்பொழுது தெளிவாகத்தெரிகிறது. ஒன்று வழக்குகளை முடிக்கவேண்டும் அல்லது முடியாது என்று தள்ளுபடி செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையில் ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வாக இழுத்து சாகடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. முடியவில்லை என்றால் வேறு தகுதியான நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு விடலாம். ஐடி நிறுவனங்களுக்கு குத்தகை விட்டால் ஆறு மாதத்தில் ஒரு வழக்கு கூட நிலுவையில் இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X