சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கஜகஸ்தானில் ராணுவ பயிற்சிபுதுடில்லி: நம் ராணுவத்தின் பீஹார் படைப்பிரிவை சேர்ந்த 90 பேர், கஜகஸ்தான் வீரர்களுடன் ராணுவ பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். கஜகஸ்தானில் 'காஸிண்ட் 21' என்ற பெயரில், 30ம் தேதி துவங்கி, 13 நாட்கள் இப்பயிற்சி நடைபெற உள்ளது. இதில், மலைப்பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மையமாக கொண்டு, இரு நாட்டு வீரர்களும் பங்கேற்பர் என, ராணுவ அமைச்சகம் நேற்று

கஜகஸ்தானில் ராணுவ பயிற்சிபுதுடில்லி: நம் ராணுவத்தின் பீஹார் படைப்பிரிவை சேர்ந்த 90 பேர், கஜகஸ்தான் வீரர்களுடன் ராணுவ பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். கஜகஸ்தானில் 'காஸிண்ட் 21' என்ற பெயரில், 30ம் தேதி துவங்கி, 13 நாட்கள் இப்பயிற்சி நடைபெற உள்ளது.

இதில், மலைப்பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மையமாக கொண்டு, இரு நாட்டு வீரர்களும் பங்கேற்பர் என, ராணுவ அமைச்சகம் நேற்று கூறி உள்ளது.2 ஆதார் அட்டைகள்: ஒருவர் கைதுபரேலி: உத்தர பிரதேசத்தின் பரேலி விமான நிலையத்தில் இருந்து, மும்பை செல்வதற்காக வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அவரிடம், அஷ்பக் நவாப் ஷேக் மற்றும் அஸ்லம் இஸ்மாயில் என, இரு வேறு பெயர் மற்றும் முகவரிகளில், ஆதார் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்; உண்மையில் அவர் யார் என, விசாரணை தொடர்கிறது.


மனைவியின் சிதையில் பாய்ந்த முதியவர்பவானி

பட்னா: ஒடிசாவின் பவானிபட்னா மாவட்டம் கோலமுண்டா பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் நிலாமணி சபர், 65. இவரது மனைவி ராய்பாரி, 60, இறந்ததால் நேற்று இறுதிச்சடங்குகள் நடந்தன.அவரது உடலுக்கு தீயூட்டிய பின், மகன்கள் மற்றும் உறவினர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது மனைவி இறந்த சோகம் தாளாத நிலாமணி, எரிந்த சிதையில் பாய்ந்ததால் உடல் கருகி பலியானார்.

காஷ்மீர் மணமகளுக்கு பாராட்டு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், திருமணத்திற்கு பின் மணமகனை காரில் ஏற்றி தன் மாமனார் வீட்டிற்கு மணமகள் அழைத்து செல்லும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதில் மணமகள் கோலத்தில் அப்பெண் டிரைவர் இருக்கையில் அமர, மணமகன் அருகில் அமர்கிறார். பின் உறவினர்களுடன், மணமகள் காரை செலுத்துகிறார். அவரின் துணிச்சல் நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X