கரும்பின் குறைந்தபட்ச விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சர்க்கரை ஆலை களுக்கு, தரப்படும் கரும்பின் குறைந்தபட்ச விலை, ஒரு குவின்டாலுக்கு 290 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்புக்காக நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச விலையை உயர்த்த வேண்டும்

சர்க்கரை ஆலை களுக்கு, தரப்படும் கரும்பின் குறைந்தபட்ச விலை, ஒரு குவின்டாலுக்கு 290 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்புக்காக நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச விலையை உயர்த்த வேண்டும் என்பது, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கரும்பின் குறைந்தபட்ச விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 2021 - 2022 நிதியாண்டிற்கு ௫ ரூபாய் உயர்த்தி, ௧ குவின்டால் கரும்பின் குறைந்த பட்ச விலை 290 ரூபாயாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு குவின்டால் கரும்பை உற்பத்தி செய்வதற்கு 155 ரூபாய் செலவு ஆகிறது.இந்நிலையில், தற்போது குறைந்தபட்ச விலை 290 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இது, உற்பத்தி செலவை விட 87.1 சதவீதம் அதிகமாகும். இனி விவசாயிகளுக்கு, செலவை விட 50 சதவீதம் அதிகமாக வருமானம் கிடைக்கும்.இந்த புதிய விலை நிர்ணயம், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாக உள்ளது.அடுத்த ஆண்டு, உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளதால், மத்திய அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X