மாணவர் கொலை சிறுவர்கள் கைது| Dinamalar

மாணவர் கொலை சிறுவர்கள் கைது

Added : ஆக 25, 2021
Share
ராய்கர்:சத்தீஸ்கரில், காதல் பிரச்னையில் 9ம் வகுப்பு மாணவரை பள்ளி வளாகத்தில் கொலை செய்த வழக்கில், அதே பள்ளியின் இரு மாணவர்கள் கைதாகினர்.சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு ராய்கர் நகரில் உள்ள அரசு பள்ளியில், நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையில் 9ம் வகுப்பு மாணவருடன், அதே பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய இருவர் தகராறு

ராய்கர்:சத்தீஸ்கரில், காதல் பிரச்னையில் 9ம் வகுப்பு மாணவரை பள்ளி வளாகத்தில் கொலை செய்த வழக்கில், அதே பள்ளியின் இரு மாணவர்கள் கைதாகினர்.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு ராய்கர் நகரில் உள்ள அரசு பள்ளியில், நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையில் 9ம் வகுப்பு மாணவருடன், அதே பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய இருவர் தகராறு செய்துள்ளனர்.பின், அவர்களில் ஒருவர் திடீரென 9ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயம் அடைந்த சிறுவன், மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளியில் இருந்து தப்பிச் சென்ற இரு மாணவர்களையும் கைது செய்தனர். இந்த படுகொலைக்கு, காதல் பிரச்னையே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X