அரசியல் செய்தி

தமிழ்நாடு

பென்னிக்விக் வாழ்ந்த இடத்தை இடித்து நூலகமா?

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (12+ 31)
Share
Advertisement
சென்னை : ''பென்னிக்விக் நினைவிடத்தை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் கருணாநிதி பெயரில் நுாலம் கட்டப்பட உள்ளதாக, தவறான தகவலை பரப்புகின்றனர். அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - ராஜு: மதுரைக்காரன் என்ற முறையில், சில கோரிக்கைகளை முன் வைக்கிறேன். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி,
 பென்னிக்விக் வாழ்ந்த இடம், இடித்து நூலகமா?:தவறான ,தகவல்

சென்னை : ''பென்னிக்விக் நினைவிடத்தை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் கருணாநிதி பெயரில் நுாலம் கட்டப்பட உள்ளதாக, தவறான தகவலை பரப்புகின்றனர். அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - ராஜு: மதுரைக்காரன் என்ற முறையில், சில கோரிக்கைகளை முன் வைக்கிறேன். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி, தரிசனம் செய்ய வசதியாக நவீன வசதிகளுடன், 'யாத்ரிகா நிவாஸ்' கட்டித்தர வேண்டும்.ஜெயலலிதா அரசால், மதுரையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி, பணி நடந்து வருகிறது. அவற்றை உரிய காலத்தில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


வளர்ச்சிப் பணிகள்



மதுரை நான்கு மாட வீதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அங்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும். முல்லை பெரியாறு அணையில் இருந்து, நேரடியாக இரும்பு குழாயில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை, 2023க்குள் நிறைவேற்றி தர வேண்டும். வைகையின் இரு கரையில் நடந்து வரும், விரைவு சாலை பணிகளை, விரைவாக முடிக்க வேண்டும்.மதுரையில் பெண்களுக்கான அரசு கல்லுாரி மட்டும் உள்ளது.

எனவே, ஆண்களுக்கு ஒரு கல்லுாரி, இரு பாலர் கல்லுாரி, ஒரு பொறியியல்கல்லுாரி அமைத்து தர வேண்டும். மாரியம்மன் தெப்பக்குளத்தில், சுற்றுலாத்துறை சார்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.மதுரை - நத்தம் சாலையில், முல்லை பெரியாறுஅணை கட்டிய பென்னிக்விக் வாழ்ந்த இல்லம் உள்ளது. அதை இடித்து விட்டு, கருணாநிதி நுாலகம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




குறுக்கீடு



அமைச்சர் தியாகராஜன்: ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, எத்தனை குறுக்கீடு வந்தது, வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது நெஞ்சில் மறக்காமல் உள்ளது. தவறான தகவலை பதிவு செய்ததால் குறுக்கிடுகிறேன்.அந்த இல்லம், பென்னிக்விக் இல்லம் அல்ல. அவர், 1911ல் மறைந்தார். அந்த இல்லம்,1912 முதல், 1915ல் கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு தெளிவாக விளக்கம் அளித்த பிறகும்,உறுப்பினர் தவறான கருத்தை பதிவு செய்யக்கூடாது என்பதற்காக குறுக்கிட்டேன்.


முதல்வர் ஸ்டாலின்:

பென்னிக்விக் நினைவு இல்லத்தை அப்புறப்படுத்தி, கருணாநிதி பெயரில் நுாலகம் கட்டப்பட இருப்பதாக, முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.சட்டசபைக்கு வெளியில் பேசப்பட்ட போது, பொதுப்பணித்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். இப்போதும் கூறுகிறேன்.

நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால், நிச்சயமாக அதற்கு அடிபணிய அரசு தயாராக உள்ளது. நீங்கள் கூறியதற்கு ஆதாரம் இருந்தால் கூறுங்கள். அதை மாற்றிக் கொள்ள தயாராக உள்ளோம். ஆனால், எந்த ஆதாரமும் இல்லை; தவறாக பிரசாரம் செய்கின்றனர். அது சட்டசபையில் பதிவாகக்கூடாது என்பதற்காக விளக்கம் அளிக்கிறேன்.ராஜு: இடிக்கப் போறாங்க என்று கூறவில்லை; சொல்றாங்க என்பதை கூறினேன்.முதல்வர்: சொல்றாங்க என்று, மூன்றாவது முறை எம்.எல்.ஏ.,வாக, இரு முறை அமைச்சராக இருந்தவர் கூறுவது, உங்கள் பெருந்தன்மையை குறைப்பதாக உள்ளது. ஆதாரம் இருந்தால் கூறுங்கள்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (12+ 31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஆக-202114:56:10 IST Report Abuse
அருணா மக்கள் நலனுக்காக அணை கட்ட தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றவரை விட தன் குடும்ப வாரிசுகளுக்கு மேலும் மேலும் சேர்த்து கொடுத்தவருக்கு சிலைகள் நூலகம். நல்ல ஆட்சி. மக்களுக்கு மதிமயக்கமா மதுமயக்கமா?
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-ஆக-202112:46:34 IST Report Abuse
Dhurvesh அவர்கள் கட்சி தலைவர் ஜெயலலிதாவையே அவர்கள் மறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது, தேர்தல்வரும் போது தான் இவர்களுக்கு ஜெயலலிதா ஞாபகம் வரும் மற்றபடி பென்னிகுயிக் மீது இவர்களுக்கு அக்கறை எல்லாம் கிடையாது, இவருக்கு நூலகம் கட்டுவது அதுவும் கருணாநிதி பெயரில் பிடிக்கவில்லை அதற்காக பிரச்னையை கிளப்புகிறார்கள்
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
26-ஆக-202117:01:50 IST Report Abuse
duruvasarபோப் ஆண்டவரும் நூலகம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார் என்பது எரிச்சலை இன்னும் அதிக படுத்தியிருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-ஆக-202111:10:55 IST Report Abuse
duruvasar எதிர் கட்சிகள் என்றால் அரசியல் செய்யவேண்டும் அவியல் செய்ய கூடாது என அன்று அறிஞன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X