பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட கூடுதலாக 16 லட்சம் 'டோஸ்'

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை :''தமிழகத்தில் பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், 16 லட்சம் 'டோஸ்' மத்திய அரசு வழங்குகிறது,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.அவர் கூறியதாவது:பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பலர், தேர்தலின் போதும், மற்ற நேரங்களிலும் தடுப்பூசி போட்டு
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடகூடுதலாக 16 லட்சம் 'டோஸ்'

சென்னை :''தமிழகத்தில் பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், 16 லட்சம் 'டோஸ்' மத்திய அரசு வழங்குகிறது,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.

அவர் கூறியதாவது:பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பலர், தேர்தலின் போதும், மற்ற நேரங்களிலும் தடுப்பூசி போட்டு இருக்கலாம். தடுப்பூசி போடாமல் இருப்பவர்களும் உள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து, அவர்களுக்காக,16 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை, மத்திய அரசு கூடுதலாக வழங்குகிறது.

இதன் வாயிலாக, தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினரை கணக்கெடுத்து, சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணிகள் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.மேலும், நீண்ட நாட்களுக்கு பின், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் இருந்து, 4 லட்சத்து 71 ஆயிரத்து 560 'கோவாக்சின்' தடுப்பூசிகள் சென்னை
வந்தன. அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து, 1 லட்சத்து 3,780 'கோவிஷீல்டு' தடுப்பூசிகளும் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை



வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 'அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட வேண்டியது கட்டாயம்; தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.'தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் அனைவரும், தங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை நாளைக்குள் தலைமை ஆசிரியர்களிடம் தாக்கல்செய்ய வேண்டும்' எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி திறப்புக்குள், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில், சில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி சான்றிதழில், இரண்டு டோஸ்களும் ஒரே நாளில் போட்டதாக பதிவாகி உள்ளது.
இதனால், இந்த சான்றிதழை பள்ளிகளில் எப்படி சமர்ப்பிக்க முடியும் என, ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தகவல்களை பதிவேற்றம் செய்த மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'ஒரே நாளில் இரண்டு தடுப்பூசி போட்டதாக சான்றிதழ் கிடைக்கப் பெற்றவர்கள், தாங்கள் தடுப்பூசி போட்ட சுகாதார நிலையங்களுக்கு சென்று தகவல் தெரிவித்தால், சான்றிதழ் திருத்தம் செய்து வழங்கப்படும்' என்றார்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X