பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கான 'இன்டர்நெட்' பாதுகாப்பு 8 மொழிகளில் அறிமுகம் செய்கிறது 'கூகுள்'

Added : ஆக 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :குழந்தைகள் பாதுகாப்பான முறையில் 'இன்டர்நெட்' வசதியை பயன்படுத்துவது தொடர்பான வசதியை, தமிழ் உட்பட, எட்டு மொழிகளில் வழங்க இணையதள தேடு இயந்திரமான, 'கூகுள்' திட்டமிட்டுஉள்ளது.இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான தகவல்களை, கூகுள் இணையதளத்தில் தேடுகின்றனர். இணையத்தில் சரியான தகவல்கள் கிடைப்பதுடன், பொய்யான, போலியான தகவல்களும்
 குழந்தைகள், 'இன்டர்நெட்' பாதுகாப்பு 8 மொழி,அறிமுகம்

புதுடில்லி :குழந்தைகள் பாதுகாப்பான முறையில் 'இன்டர்நெட்' வசதியை பயன்படுத்துவது தொடர்பான வசதியை, தமிழ் உட்பட, எட்டு மொழிகளில் வழங்க இணையதள தேடு இயந்திரமான, 'கூகுள்' திட்டமிட்டுஉள்ளது.

இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான தகவல்களை, கூகுள் இணையதளத்தில் தேடுகின்றனர். இணையத்தில் சரியான தகவல்கள் கிடைப்பதுடன், பொய்யான, போலியான தகவல்களும் அதிகளவில் இடம் பெறுகின்றன.மேலும் பயன்


latest tamil news


படுத்துவோரின் தகவல்களும் திருடப்படுகின்றன. இதுபோன்ற மோசடிகள் குறித்து அறிந்துள்ள கூகுள், தன் இணையதளத்தில், பாதுகாப்பு மையம் ஒன்றை அமைத்துஉள்ளது. இதில் பாதுகாப்பான முறையில் இன்டர்நெட்டை பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.இந்நிலையில், சிறுவர் - சிறுமியர் பாதுகாப்பான முறையில் இன்டர்நெட் பயன்படுத்துவதற்கான புதிய முயற்சியில், கூகுள் ஈடுபட்டுஉள்ளது.

இத்திட்டம், இந்தியாவிலும் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டம் விளையாட்டுடன் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரபலமான, அமர் சித்திர கதா என்ற, 'காமிக்ஸ்' இதழுடன் இணைந்தும் செயல்பட திட்டமிட்டுள்ளது. அந்த இதழ்களில், இன்டர்நெட் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் இடம்பெற உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
26-ஆக-202109:47:56 IST Report Abuse
Kanthan Iyengaar கட்சில இருக்கும் பொம்மனாட்டிகளுக்கு பாதுகாப்பு தர செயலி ஏதாவது இவா கண்டுபிடிப்பாளா?
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
26-ஆக-202108:21:29 IST Report Abuse
மணி இந்தியில் மட்டும் வெளியிட்டால் போதாதா?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
25-ஆக-202123:44:06 IST Report Abuse
spr "சிறுவர் - சிறுமியர் பாதுகாப்பான முறையில் இன்டர்நெட் பயன்படுத்துவதற்கான புதிய முயற்சியில், கூகுள் ஈடுபட்டுஉள்ளது." பொதுவாகத் தமிழனுக்கு சமுதாய சிந்தனை குறைவு என்றொரு கருத்து பரவலாக இருக்கிறது அதிலும் கூகுள் அமைப்பே நம் விவரங்களைத் திருடுகிறது நம்மை வேவு பார்க்கிறது என்றொரு கருத்து இருக்கையில், இந்த முயற்சி உண்மையாகவே குழந்தைகள் இணையத்தில் பாதுகாப்பாக செயல்பட உதவுமானால் சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் சுந்தர் பிச்சைக்குப் பாராட்டுகள். ஆனால் வழக்கம் போல பாதுகாப்பு மையம் அமைத்துவிட்டோம் இனி பாதுகாப்பாகச் செயல்படுவது உங்களின் பொறுப்பு என்று பொறுப்புத் துறப்பு செய்யாமல் அதன் பாதுகாப்புத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் குறிப்பாக திரைப்படங்களில் வயதுக்கேற்றபடி படங்களைக் காட்சிப்படுத்துவது போல இணையத்திலும் வயதுக்கேற்றபடி தேட உதவும் அமைப்பு வேண்டும். அந்த வகையில் உண்மையான வயதை அறிய ஏதேனுமொரு அடையாள அட்டையைக் கூட சான்றாக பதிவேற்றச் சொல்லலாம் எப்படியும் அவை நம்மிடமிருந்து ஏற்கனவே திருடப்பட்டவைதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X