கெடுவுக்குள் வெளியேற தலிபான்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:''ஆப்கனை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறுவது, தலிபான்கள் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்தது,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துஉள்ளார்.ஆப்கனில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க ராணுவம், வரும் 31ம் தேதி வெளியேற 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:ஆப்கனில் இருந்து அமெரிக்கா உட்பட நேச நாட்டினரை, விமானம் வாயிலாக

வாஷிங்டன்:''ஆப்கனை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறுவது, தலிபான்கள் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்தது,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துஉள்ளார்.

ஆப்கனில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க ராணுவம், வரும் 31ம் தேதி வெளியேற 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:ஆப்கனில் இருந்து அமெரிக்கா உட்பட நேச நாட்டினரை, விமானம் வாயிலாக அழைத்து வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும், ராணுவத்தினருக்கான இடர்பாடுகளும், சவால்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஐ.எஸ்., அமைப்பு, காபூல் விமான நிலையத்தில், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. அதனால், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக பணியை முடிக்க, அமெரிக்கா முயன்று வருகிறது. அதற்கு தலிபான்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அமெரிக்கர்கள் மட்டுமின்றி, சிறப்பு குடியேற்ற 'விசா' வைத்துள்ளோர் தடையின்றி காபூல் விமான நிலையத்திற்கு வர, தலிபான்கள் அனுமதிக்க வேண்டும். தலிபான்கள் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்து தான், ஆப்கனில் இருந்து 31ம் தேதிக்குள் அமெரிக்க ராணுவம் வெளியேற முடியும் என்ற நிலையுள்ளது. இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

இதற்கிடையே, கெடுவுக்குள் அமெரிக்க ராணுவம் வெளியேறாவிடில், கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என, தலிபான்கள் மிரட்டிஉள்ளனர்.


'இ - விசா' அவசியம்



மத்திய அரசு, ஆப்கன் நாட்டினர் இந்தியாவுக்கு வர, 'இ - எமர்ஜென்சி விசா' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'ஆப்கன் மக்கள் இந்தியா வர விரும்பினால், இந்த 'இ - விசா' இருந்தால் மட்டுமே வர முடியும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆப்கன் மக்கள், இந்தியா வர, 'இ - விசா' கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X