அஸ்தானா நியமன வழக்கு ஐகோர்ட்டுக்கு 2 வாரம் அவகாசம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லி போலீஸ் கமிஷனராக, ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு, டில்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.குஜராத் மாநிலத்தில் இருந்து, 1984ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர் ராகேஷ் அஸ்தானா. இவர், எல்லை பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்து வந்தார். பணி ஓய்வு

புதுடில்லி:டில்லி போலீஸ் கமிஷனராக, ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு, டில்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

குஜராத் மாநிலத்தில் இருந்து, 1984ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர் ராகேஷ் அஸ்தானா. இவர், எல்லை பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்து வந்தார். பணி ஓய்வு பெற நான்கு நாட்கள் இருந்த நிலையில், டில்லி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்குமாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, அஸ்தானாவின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால், உயர் நீதிமன்றத்திற்கு மேலும் அவகாசம் வழங்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேட்டுக் கொண்டார்.இதை ஏற்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்து நேற்று உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X