காங்., அரசும் பொதுச் சொத்தை விற்றது: நிர்மலா சீதாராமன்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
மும்பை:''காங்., ஆட்சியிலும் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்கள் விற்கப்பட்டன; அதை ராகுல் மறந்து விட்டாரா,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.அடிப்படை கட்டமைப்பு துறையில், பொதுத் துறை நிறுவனங்கள் பலவற்றின் சொத்து மதிப்பிற்கேற்ப முழு அளவிலான பயன் மற்றும் வருவாய் கிடைக்காத நிலை உள்ளது. இதையொட்டி, ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட

மும்பை:''காங்., ஆட்சியிலும் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்கள் விற்கப்பட்டன; அதை ராகுல் மறந்து விட்டாரா,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடிப்படை கட்டமைப்பு துறையில், பொதுத் துறை நிறுவனங்கள் பலவற்றின் சொத்து மதிப்பிற்கேற்ப முழு அளவிலான பயன் மற்றும் வருவாய் கிடைக்காத நிலை உள்ளது. இதையொட்டி, ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு துறையின் சொத்துக்களை, குத்தகை அடிப்படையில் பராமரிக்க தனியாருக்கு உரிமை வழங்கி, குறித்த காலத்திற்குப் பின், மீண்டும் பெறும் வகையில் புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துஉள்ளது.

'தேசிய சொத்துக்களை பணமாக்குதல்' என்ற இந்த திட்டத்தில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டு, அத்தொகை மீண்டும் அடிப்படை கட்டமைப்பு துறையில் முதலீடு செய்யப்படும். இதற்கு காங்., முன்னாள் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், மும்பையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டன. மும்பை - புனே விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் 8,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.

புதுடில்லி ரயில்வே நிலையத்தை குத்தகைக்கு விட, தனியார் நிறுவனங்களிடம் ஏன் விண்ணப்பம் பெறப்பட்டது. அப்போது ஏன் அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது என்ன அவர்களின் குடும்ப சொத்தா?டில்லியில், ஒரே ஒரு காமன்வெல்த் விளையாட்டு மூலம் எவ்வளவு பணம் சுருட்டப்பட்டு, பல பினாமி கணக்குகளில் போடப்பட்டது தெரியாதா?

தேசிய சொத்துக்களை பணமாக்குதல் திட்டம் பற்றி எதுவும் தெரியாமல் ராகுல் பேசுகிறார். இத்திட்டத்தில், சொத்துக்கள் விற்கப்படாது. மீண்டும் அரசு வசமே ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வரும், திரிண முல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''தேசிய சொத்துக்களை விற்பதற்கு, அவை மோடி அல்லது பா.ஜ.,வுக்கு சொந்தமானவை அல்ல,'' என, மம்தா கூறியுள்ளார்.


மாவட்டத்திற்கு ஒரு திட்டம்



மும்பையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வங்கிகள், அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மாவட்டத்திற்கு ஒரு திட்டம் வீதம், நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகள், தொழில் வர்த்தக கூட்டமைப்புகள் ஆகியவற்றுடன் கலந்து பேசி, குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X